Share on Social Media


ஒரு தொடக்கத்திற்கும், முடிவிற்குமான இடைவெளியில் ஒரு பெரும் பயணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இயற்கையின் மற்றுமொரு பரிமாணத்திலிருந்து இதைப் பார்த்தோமேயானால், ஒரு முடிவு அல்லது அழிவிலிருந்து தான் புதிய தொடக்கம் தொடங்குகிறது. இதன் வழி வரும் செய்தி, முடிவும், தொடக்கமும் மிக மிக நெருக்கத்தில் இருக்கின்றன என்பதே.

ஒவ்வொரு நாளும் முன்னால் முன்னேறி செல்லும் நாம் கவனிக்க மறந்த மிக முக்கிய விஷயங்களில் ஒன்று “முடிவுகளின் கதை”. அனுதினமும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொடக்கங்களால் நிறைந்திருக்கும் இந்த தொழில்நுட்ப உலகத்தில் முடிவுகளின் கதைகளை அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது.

அப்படியாக, சில முடிவுகளின் கதைகளை இந்தத் தொடரில் காண இருக்கிறோம். பல காரணங்களால் அழிந்துப் போன, பல காரணிகளால் அழிக்கப்பட்ட நகரங்களின் கதைகளை வெளிச்சம் போட்டு காட்டவிருக்கிறது இந்த “ Ghost Town “ தொடர்…

“ எந்த மனிதனும் வாழ்ந்திட முடியாத நிலையை எட்டியிருந்தது அந்த ஊர். அது புதன் (Mercury ) கிரகத்தைவிடவும் சூடாக இருந்தது. சனி ( Saturn ) கிரகத்தில் நிரம்பியிருக்கும் விஷவாயுக்கள் அத்தனையும் அதன் காற்றில் பரவியிருந்தன. அந்த மண்ணின் பல இடங்களில் வெப்பம் 1000 டிகிரி Fahrenheit-யை கடந்திருந்தது. நான் அங்கு சென்ற நாளை என் வாழ்வில் மறக்கவே முடியாது. “

– David Dekok – அமெரிக்காவின் பிரபல புலனாய்வு பத்திரிகையாளர்.

அமெரிக்க ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களித்த பென்சில்வேனியா மாகாணத்தின் ஒரு சிறு நகரம் சென்ட்ராலியா. பென்சில்வேனியா மாகாணம் முழுக்கவே பல்வேறு தாதுவளங்களால் நிறைந்திருந்தது.

உலகின் மிக அரிதான, விலை அதிகமான ஒரு நிலக்கரி வகை ‘ஆந்த்ரசிட் ‘ ( Anthracite Coal ). 1800 களின் தொடக்கத்தில் சென்ட்ராலியா நகரத்தில் இந்த வகை நிலக்கரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சுரங்கங்கள் அமைக்கப்பட்டன.

இன்னும் ஏராளமான நிலக்கரிச் சுரங்கங்கள் அமைப்பதற்கான இடங்கள் இருந்தாலும், அந்தக் கடினமான வேலைகளுக்கு அப்போது அமெரிக்காவில் ஆட்கள் இல்லை. அந்த சமயத்தில்தான், சென்ட்ராலியா நகருக்கு வந்து சேர்ந்தார்கள் ‘ Molly Maguires ‘ எனும் ரகசிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பற்றி அறிந்துக்கொள்ள நாம் 1800களின் வட-மத்திய Ireland வரலாற்றினைத் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *