1602023227 pic Tamil News Spot
Share on Social Media

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் வரும் 30ம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. மும்பையில் நடக்கும் இந்த திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

30ம் தேதி எனக்கும், கவுதமுக்கும் கல்யாணம், ஆனால்…: காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலுக்கும் அனைவரையும் போன்று பிரமாண்டமாக திருமணம் செய்து கொள்ள ஆசை தான். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் அது நடக்காமல் போய்விட்டது. காஜல் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் கவுதம் கிட்ச்லு யார் என்று பார்ப்போம்.

மும்பையில் இருக்கும் தி கதீட்ரல் அன்ட் ஜான் கனன் பள்ளியில் படித்தவர் கவுதம். அதன் பிறகு அமெரிக்காவில் இருக்கும் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார். அவர் Discern Living என்கிற நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் இன்டீரியர் டிசைனிங் மற்றும் வீடுகளை அலங்காரம் செய்யும் வேலைகளை செய்து வருகிறது.

சொந்தமாக ஒரு நிறுவனத்தை துவங்கும் முன்பு ஃபேப் ஃப்ரனிஷ் கம்பெயினியில் துணை தலைவராக வேலை செய்தார் கவுதம். மேலும் The Elephant Company-ன் சிஇஓவாகவும் இருந்திருக்கிறார்.

கவுதமுக்கு மாரதானில் ஓடுவது என்றால் பிடிக்கும். ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வரும் கவுதமுக்கு சாப்பாடு என்றால் உயிர். கவுதம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள்.

கவுதம் பெரும்பாலும் தன் வேலை தொடர்பான புகைப்படங்களை தான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார். காஜலின் வருங்கால கணவர் என்று தெரிந்த பிறகு பலரும் கவுதமை இன்ஸ்டாகிராமில் பின்தொடரத் துவங்கியுள்ளனர்.

நான் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று காஜல் அகர்வால் இன்று ட்வீட் செய்தார். இதையடுத்து கவுதமும் திருமணம் பற்றி ஏதாவது போஸ்ட் போட மாட்டாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கிடையே அது ஏன் நடிகைகள் எல்லாம் தொழில் அதிபர்களையே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *