Share on Social Media

ஆனால் பித்தப்பை கற்களை பொறுமையாக படிப்படியாக குறைக்க உணவு முறைகளை கடுமையாக பின்பற்றினாலே போதும். அதற்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் மூலிகைகள் என்னென்ன என்பதை ஆயுர்வேத மருத்துவ நிபுணர் வாயிலாக பார்க்கலாம்.

​பித்தப்பை கற்களை கரைக்கும் மூலிகை

பித்தப்பை கற்களை முறையான உணவு பழக்கம் மற்றும் சீரான வாழ்க்கை முறை இருந்தாலே படிப்படியாக கற்களை குறைத்துவிடலாம். அதற்கு வீட்டு சிகிச்சைகளாக என்ன செய்யலாம் என்பதை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்G.K.தாராஜெயஸ்ரீ BAMS.

நெஞ்சு வலிக்கு வீட்டு வைத்தியம் என்ன? மாரடைப்பு என்பதை எப்படி கண்டறிவது?

மஞ்சள்

மஞ்சள் குர்குமின் சேர்மங்களால் நிறைந்தவை. இது காலரெடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு புகழ் பெற்றது. இரவு உணவுக்கு பிறகு சூடாக ஒரு டம்ளர் பாலில் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குடிப்பதன் மூலம் இது பித்த திரவங்களை திரவமாக்குகிறது.

பித்த நாளங்களிலிருந்து பித்தப்பைகளை அகற்றுவதற்கு உதவுகிறது மேலும் செரிமானம் மேம்படுத்துகிறது. கல்லீரல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

நெருஞ்சில்

samayam tamil Tamil News Spot

நெருஞ்சி பழங்கள் ஆல்கலாய்டுகள் பித்தப்பை கற்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை குணப்படுத்துவதில் அதிசயங்களை செய்யும். பைட்டோஸ்டெரால் போன்ற உயிர்சக்தி கூறுகளை இவை கொண்டுள்ளன. நெருஞ்சி சூர்ணாவாகவோ அல்லது தூள் வடிவிலோ எடுத்துவந்தால் பித்தப்பை நச்சுத்தன்மையை வெளியேற்றலாம்.

கொள்ளு

samayam tamil Tamil News Spot

ஆரம்ப கட்ட பித்தப்பை கற்களுக்கு சிகிச்சையளிக்க கொள்ளு பயனளிக்கும். வெங்காயம், கருப்பி மிளகும் ,மஞ்சள், இலவங்கப்பட்டை, பசு நெய் சேர்த்து சூப் வைத்து குடிக்கலாம். இது பித்தக்கற்களை உடைக்க செய்கிறது. பசு நெய் ஆனது கற்கள் வெளியேறுவதை எளிதாக்குகிறது, வலி நிவாரணத்துக்கும் உதவுகிறது.

​கற்றாழை

samayam tamil Tamil News Spot

கற்றாழை என்பது கல்லீரல் மற்றும் பித்தப்பை பிரச்சனைகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு எதிரி. சம்ஸ்கிருதத்தில் குமாரி என்று அழைக்கப்படும் இது பித்தப்பை கற்களை சுத்தப்படுத்தும் சக்தி வாய்ந்த பொருள் ஆகும்.

கற்றாழை இலைகளிலிருந்து ஜெல் பிரித்தெடுத்து சிறிது தேன் சேர்த்து தினமும் இந்த சாற்றை உட்கொள்வது பித்தப்பை கற்களை வெளியேற்ற செய்யும். இது நிரூபிக்கப்பட்டுள்ள இயற்கை தீர்வு ஆகும்.

​கரு மிளகு

samayam tamil Tamil News Spot

சமஸ்கிருதத்தில் மரிச்சா என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு பித்த சுரப்புகளை ஒழுங்குப்படுத்துகிறது, மேலும் கல்லீரல், பித்தப்பை ஆகியவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தும் கொலரெடிக் கூறுகள் போன்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

சளியை கரைத்து மலத்தில் வெளியேற்றும் மூலிகை கஷாயம், குழந்தைகளுக்கும் ஏற்றது!

சில கருப்பு மிளகுத்தூளை உணவுக்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் எடுத்துகொள்வது கொழுப்பை சமப்படுத்தி பித்தப்பை கற்களை அகற்றுகிறது.

​மாட்டு சிறுநீர் அல்லது கோமியம்

samayam tamil Tamil News Spot

பசு சிறுநீர் உடல் வெப்பத்தை அதிகரிக்கிறது. உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றூம் சமப்படுத்த இது உதவுகிறது. இது நல்ல சுத்திகரிப்பு ஆகும். பித்த ஓட்டத்தை ஒழுங்குப்படுத்துகிறது. கூடுதல் கொழுப்பை எதிர்த்து போராடுகிறது. அமா மற்றும் கபாவை ஜீரணிக்க உதவுகிறது. வாதத்தை சமப்படுத்துகிறது.

​ராக் சால்ட்

samayam tamil Tamil News Spot

காலை உணவுக்கு முன்பு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நீரில் சிறிது ராக் சால்ட் சேர்த்து குடியுங்கள். இதை குடித்த பிறகு உங்கள் வலப்பக்கமாக படுத்துகொள்ளுங்கள். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்யுங்கள். ஆப்பிள் மட்டும் சாப்பிட்டு உண்ணாவிரதம் இருப்பது இந்த மருந்தின் நன்மைகளை மேம்படுத்துகிறது. பித்த ஓட்டத்தை அதிகரிக்க இது நல்ல தீர்வாக இருக்கும்.

​மரமஞ்சள் / தாரு ஹரித்ரா

samayam tamil Tamil News Spot

தாரு ஹரித்ராவுடன் மஞ்சளை பயன்படுத்தலாம். சூடான தேநீராக்கி இதை குடிப்பதன் மூலம் இதன் கூர்மையான பண்புகள் கொழுப்பு மற்றூம் பித்தப்பைக்கற்களை கரைக்கிறது.

​கரிசலாங்கண்ணி

samayam tamil Tamil News Spot

வாதத்தை தணித்து வலி நிவாரணி மருந்தாக செயல்படும் சிறந்த மூலிகை இது. சிறந்த பசியின்மை மற்றும் செரிமானம் மற்றும் கல்லீரல் மேம்படுத்தக்கூடியவை. மேலும் இது கல்லீரல் பித்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

Pirandai :செரிமானம் ஆகாம பேதியாகுதா, பிரண்டையும் ஓமமும் இப்படி எடுத்துக்கங்க! உடனே சரியாகும்!

கடுகு ரோகிணி

கடுகு ரோகிணி கல்லீரல் தூண்டுதலை உண்டாக்க கூடியவை. கசப்பு சுவையை கொண்டிருக்க கூடியவை. இது பசியை அதிகரிக்கும். மஞ்சள் காமாலைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் இதுவும் ஒன்றாகும் பெரிய அளவுகளில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இது உதவுகிறது. பித்தப்பையில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது.

​சாறுகள்

samayam tamil Tamil News Spot

கற்றாழை சாற்றை தினமும் குடிப்பதன் மூலம் பித்தப்பை கற்களை கரைக்க செய்கிறது.

வெள்ளரி, பீட்ரூட் மற்றும் கேரட் சாற்றை சம பாகங்களில் கலந்து எடுக்கவும். அறுவை சிகிச்சை செய்யாத பித்தப்பை கற்களை வெளியேற்ற தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.

புதினா தேநீர் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடியுங்கள். இது பிடிப்பை குறைக்கும் மற்றும் பித்தப்பைக்கற்களால் உண்டாகும் வலியை உடனடியாக நீக்குகிறது.

பேரிக்காய் சாறு அரை கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் நீர்த்த்போக செய்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு தேன் சேர்த்து குடியுங்கள். தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும்.

பால் நெருஞ்சி விதைகளை வேக வைத்து தேன் சேர்த்து குடிப்பதன் மூலம் பித்தப்பை கற்கள் குணமாகலாம்.

எலுமிச்சைச்சாறு பேரிக்காய் சாறு மற்றும் ஆப்பிள் சாறு ஆகியவற்றை அடிக்கடி குடிப்பது பயனளிக்கும்.

திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து நாள் ஒன்றூக்கு இரண்டு முறை எடுத்துகொண்டால் பித்தப்பை கற்களை தடுக்கலாம். குணப்படுத்தவும் செய்யலாம்.

மிளகுடன் உப்பு சேர்க்காமல் சுரக்காய் சூப் குடித்தால் அது பித்தப்பை கற்களை தடுக்கும் மற்றும் குணப்படுத்த செய்யும். முள்ளங்கி சாறு, க்ரான்பெர்ரி சாறு குடிக்கலாம்.

விளக்கெண்ணெய் பித்தப்பை பகுதியின் மேல் ஆமணக்கு எண்ணெய் தடவலாம்.

தினமும் இரண்டு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். பிறகு 2 மணி நேரம் கழித்து காலை உணவை எடுத்துகொள்ளுங்கள். தொடர்ந்து 4 நாட்கள் வரை இதை செய்ய வேண்டும். இது கற்களை மென்மையாக்கும். பிறகு 20 மில்லி ஆலிவ் எண்ணெய் மற்றும் 40 மில்லி எலுமிச்சை சாறு 4 வது நாள் மாலை எடுத்துகொள்ள வேண்டும். இது பித்தப்பை கற்களை வெளியேற்றுகிறது. இந்த சுழற்சி சுமார் 20 நாட்களுக்கு 5 முறை என மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

இந்த வைத்தியம் பலனளிக்க தினசரி சமையலில் இஞ்சி. மிளகு, பெருங்காயம் ஆகிய மூலிகைகள் சேர்க்க வேண்டும். பித்தப்பை கற்கள் ஏற்படுவதை குறைப்பதற்கான சிகிச்சையின் கலவையாக அபதர்பனா (உண்ணாவிரதம் ) லங்கனா ( இலேசான உணவு) மற்றும் வீரேச்சனா ( இலேசான சுத்திகரிப்பு ) பரிந்துரைக்கிறது.

​ஆயுர்வேதத்தில் பித்தப்பை கற்களுக்கு சிகிச்சை

samayam tamil Tamil News Spot

பித்த கப ஹரா சிகிச்சை (பித்தத்தை குறைப்பதில் அடங்கும் சிகிச்சை)

உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆலோசனை

பித்தப்பை அமைப்பதில் உணவுக்காரணிகள் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது. பொருத்தமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிக முக்கியமானது. அதனால் பித்தப்பை கற்களை அகற்றுவதில் அவை மீண்டும் உருவாகாமல் தடுப்பதில் கீழ் இருக்கும் விதிகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

வழக்கமான மற்றும் நியாயமான உணவு நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும். நீண்ட நேரம் கழித்து இரவு உணவு மற்றும் விருந்துகள் தவிர்க்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள் உடன் சீரான உணவை எடுத்துகொள்ள வேண்டும். நிறைவுற்ற கொழுப்புகளை தவிர்க்க வேண்டும்.

டான்சிலிட்டிஸ் : சாப்பாடு விழுங்க முடியாத அளவுக்கு தொண்டை வலி, காரணமும் ஆயுர்வேத சிகிச்சையும்!

காலை உணவுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவில் எலுமிச்சை, ஆப்பிள், பேரிக்காய், முலாம்பழம், தர்பூசணி, மாதுளை, அன்னாசி போன்றவை எடுத்துகொள்ளலாம்.

ஏலக்காய், இலவங்கப்பட்டை அல்லது கருப்பு மிளகாய் ஆகியவற்றை தாரளமாக பயன்படுத்துங்கள்.

இறைச்சி, கொழுப்பு உணவு, ஜங்க்ஃபுட், இனிப்பு சாக்லேட், ரொட்டி, கேக்குகள், தயிர், வெண்ணெய் மற்றும் சீஸ் போன்ற பால் பொருள்கள் கார்பனேட்டர் பானங்கள், ஆல்கஹால் போன்றவை கட்டுப்படுத்த வேண்டும்.

​பஞ்சகர்மா அல்லது டீடாக்ஸ் தெரபி

samayam tamil Tamil News Spot

வீரேச்சனா (சுத்திகரிப்பு சிகிச்சை)

பித்தாவின் அதிக செறிவு மற்றும் கல்லீரல் தவறாக செயல்படுவதால் பித்தப்பை கற்கள் உண்டாகிறது. வீரேச்சனா/ சுத்திகரிப்பு ( வயிற்று சுத்திகரிப்பு) பித்தாவுக்கு சிறந்த சிகிச்சையாகும்.

வாமன் ( எமெசிஸ் சிகிச்சை)

பித்தப்பைகள் ஹைபர் கொழுப்பு மற்றும் உடல் பருமனுடன் தொடர்பு கொண்டவை என்றால் டிஸ்லிபிடெமியாவை சரி செய்ய வாமன் சிகிச்சை செய்யப்படுகிறது.

​பித்தப்பை கற்களுக்கான ஆயுர்வேத சிகிச்சை

samayam tamil Tamil News Spot

ஆயுர்வேதத்தில் பித்தப்பைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

வரணாதி கஷாயம் மாத்திரைகள்,

கஞ்சனரா குக்குலு மாத்திரைகள்,

திரிபலா சூரணம்,

சங்கவத்,

ஹிங்வாஷ்டக் சூரணா,

அவிபதிசூரணம்,

அபயரிஷ்டம்,

குமர்யசவம்,

படோலகதுரோனியாடி கஷாயம்,

திரக்‌ஷதி கஷாயம்,

பாலபுர்னர்னவடி கஷாயம்,

வரனாதி கஷாயம்,

வாசகுலுசயாடி கஷாயம்,

தசமுலஹரிடகி லேகியம்,

திரிவரில் லேகியம்.

நடுத்தர வயதிலும் மார்பகம் இளமையா ஃபிட்டா இருக்க உதவும் வீட்டு வைத்தியம்! எல்லோருமே செய்யலாம்!

குறிப்பு

பித்தப்பை கற்களை வெளியேற்ற சுயமாக முயற்சிக்க கூடாது. மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெற்ற பிறகே அவரது பரிந்துரையின் பெயரில் இதை செய்ய வேண்டும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *