Share on Social Media

ஊட்டச்சத்து உணவுகளில் பழங்களுக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. நோயுற்றவர்களை பார்க்க போகும்போது எப்போதும் மக்கள் பழங்களை வாங்கி செல்வதை பார்க்க முடியும். அதே போல பண்டிகை காலங்களில் துவங்கி திருவிழா, திருமணம் என அனைத்து விழாக்களிலும் பழங்கள் இருப்பதை பார்க்கலாம். அந்த அளவிற்கு பழங்கள் நமது வாழ்வில் முக்கியமானதாக உள்ளன.

​பழங்கள்

பழங்கள் அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. இவை வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்களை கொண்டுள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உதவக்கூடிய ஒரு விஷயமாக பழங்கள் உள்ளன. எனவே உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க உதவும் சில முக்கியமான பழங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

வாழைப்பழம்

samayam tamil Tamil News Spot

வாழைப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பழமாகும். மேலும் இது எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழமாகும். இனிப்பு விருந்து அளிக்கும்போது அதில் சேர்க்க வேண்டிய ஒரு பழமாக வாழைப்பழம் இருக்கும், இது அடர்த்தியான மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்தை கொண்டுள்ளது. இதனால் இது உங்கள் பசியை குறைத்து வயிறை முழுமையாக உணர வைக்கும்.

அதிகப்படியான உணவு உண்பதை தவிர்ப்பதற்கு வாழைப்பழம் உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஒரு வாழைப்பழத்தில் ஒரு தேக்கரண்டி பீனட் பட்டர் தடவி அதை பயிற்சிக்கு முன்பான சிற்றுண்டியாக உண்ணலாம். காலை நேரத்தில் வாழைப்பழம் உண்பது செரிமான அமைப்பிற்கு நன்மை பயக்கும்.

எடை குறைக்க, கூட்ட – பேலன்ஸ்டு டயட்டில் ஒரு நாள் முழுக்க என்னலாம் சாப்பிடலாம்… இதோ உணவு அட்டவணை

​வாழைப்பழம்

ஆப்பிள்கள்

samayam tamil Tamil News Spot

ஆப்பிள் ஒரு ஆரோக்கியமான பழமாகும். பல்வேறு வகையில் ஆப்பிளை உணவாக எடுத்துக்கொள்ள முடியும். எந்த ஒரு பண்டிகையிலும் பழத்தட்டு இருந்தால் அதில் முக்கிய பழமாக ஆப்பிள் கண்டிப்பாக இருக்கும். இந்த பழத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. ஒரு சாலட் செய்கிறீர்கள் எனில் அதில் சில ஆப்பிள் துண்டுகளை சேர்க்க மறக்க வேண்டாம். மேலும் இது எடை இழப்பிற்கு வெகுவாக உதவுகிறது. எனவே தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கிய பழமாக ஆப்பிள் உள்ளது.

உங்க நாக்கில் இந்த மாதிரி அறிகுறி தெரிஞ்சா அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா…

ஆரஞ்சு

samayam tamil Tamil News Spot

ஆரஞ்சு வைட்டமின் சியை அதிகமாக கொண்ட பழமாகும். இது உடலில் கலோரிகளை எரிக்க உதவுகிறது, இதனால் உடல் எடை இழப்பிற்கு உதவும் பழங்களில் ஒன்றாக ஆரஞ்சு உள்ளது. நீங்கள் எடை இழப்பிற்காக முயற்சித்து வருகிறீர்கள் எனில் தினமும் நீங்கள் ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். நீண்ட நேரம் நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க தினமும் காலையில் ஆரஞ்சு ஜூஸை எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்த முறை உங்கள் சிற்றுண்டியை எடுத்துக் கொள்ள மறந்துவிட்டீர்கள் எனில் அதற்கு பதிலாக ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ளவும்.

கிவி

samayam tamil Tamil News Spot

கிவி உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் முக்கியமான பழமாகும். அதிக வைட்டமின் நிறைந்த பழமாக கிவி உள்ளது. இதில் வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், ஃபோலெட் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இது குறைந்த கலோரி கொண்ட பழம் என்பதால் உடல் எடை குறைப்பிற்கு இது உதவுகிறது. மேலும் உடலுக்கு போதுமான அளவு நீரேற்றத்தை இது அளிக்கிறது.

இந்த பழத்தை நீங்கள் எளிமையாக உட்கொள்ள நினைத்தால் கிவியை கொண்டு ஒரு ஸ்மூத்தியை தயாரிக்கலாம், அல்லது பழ சாலட்டில் மற்ற பழங்களுடன் இதை கலந்து உண்ணலாம். இது உங்கள் பசியை கட்டுப்படுத்தும் மற்றும் உடலில் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கும்.

இந்த பழங்கள் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமளிப்பதுடன் உடல் எடையை எளிதாக குறைக்கவும் உதவுகின்றன. ஏனெனில் இவை குறைந்த கலோரி, குறைந்த கொழுப்பு, அதிக ஊட்டச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளன. இவற்றை சாப்பிடுவதோடு ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் சேர்த்து சாப்பிட கூடாது. அதனால் நமக்கு எந்த பயனும் இல்லாமல் போய்விடும். எனவே ஆரோக்கியமற்ற உணவுகளை முடிந்தவரை தவிர்க்க முயற்சி செய்யவும்.

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *