Share on Social Media

குடல் எல்லா நோய்களுக்கும் நுழைவாயில்கள் ஆகும். குடல் சுத்தமாக இல்லாவிட்டால், அது பாக்டீரியாக்களின் வளர்ச்சி, ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பலவற்றுக்கான இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும். பெருங்குடலை சுத்தம் செய்ய உதவும் இயற்கை உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

​பெருங்குடல் சுத்தம் ஏன் அவசியம்?

ஒருவர் குறிப்பிட்ட காலத்துக்கு மலச்சிக்கலை கொண்டிருந்தால் அது பெருங்குடலில் குடல் சிதைவுக்கு வழிவகுக்கிறது. இது வாய்வுவை உண்டாக்க செய்யும். இது குமட்டல் அல்லது ரிஃப்ளக்ஸ் உணர்வை உருவாக்குகிறது. இது தலைவலி மற்றும் இரத்த அழுத்த இறக்கங்களை வழிவகுக்கிறது. சில நேரங்களில் வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

உணவு பெருங்குடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு காத்திருக்கிறது.பெருங்குடலில் இருக்கும் உணவுகளிலிருந்து வைட்டமின் மற்றும் தாதுக்களை மீண்டும் உறிஞ்சுகிறது. இந்த நேரத்தில் குடல் சுத்தமின்மை நச்சுக்கள் புழக்கத்தில் விடுகின்றன.

Irreugular Period : ஒழுங்கற்ற மாதவிடாய் கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகள்!

இது மனநிலையில் மாற்றங்களை உண்டாக்குகிறது. பதட்டம், உணவு, உணர்திறன் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஒற்றைத்தலைவலி, சரும கோளாறுகள் மற்றும் உடல் தாக்க நோய்களை உண்டாக்குகிறது. பெருங்குடல் நச்சு அதிகமாக சேரும் போது அது புற்றுநோயை உண்டாக்கும் அளவு ஆபத்தை உண்டாக்கும்.

பெருங்குடலை நேரடியாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக உடலை மேம்படுத்தப்படும் உணவுகள் எப்போதும் உங்கள் தட்டில் நிறைந்திருக்கட்டும். அப்படியான உணவுகள் குறித்து பார்க்கலாம்.

​ஆளிவிதைகள்

samayam tamil Tamil News Spot

ஆளி விதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் நார்ச்சத்துகள் கொண்டுள்ளன. இது பெருங்குடலின் உட்புறச்சுவர்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றன. பெருங்குடலில் ஏற்படும் கட்டி வீக்கங்களை குறைத்து செரிமானத்துக்கு உதவுகின்றன. ஆளி விதைகளை சாலட்டில் சேர்த்து எடுக்கலாம்.

​மெக்னீசியம் நிறைந்த பச்சை காய்கறிகள்

samayam tamil Tamil News Spot

மெக்னீசியம் நிறைந்த பச்சை காய்கறிகள், கொட்டைகள், விதைகள் போன்ற மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள் குடலுக்கு முக்கியம். இது குடலின் நரம்புகளை அமைதிப்படுத்துவதில் சாதகமான தாக்கத்தை உண்டாக்குகின்றன.

பெரும்பாலும் ஐபிஎஸ் அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்களுக்கு மெக்னிசியம் அளவு குறைவாக இருப்பதால் பிரச்சனைகள் உள்ளன. பல்வேறு உணவுகள் மூலம் மெக்னீசியம் பெறுவது அல்லது மெக்னீசியம் சப்ளிமெண்ட் எடுத்துகொள்வது பெருங்குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

​கரையக்கூடிய நார்ச்சத்து

samayam tamil Tamil News Spot

கரையக்கூடிய நார்ச்சத்து நமது உணவுகளின் முக்கிய பகுதி. இது கரையக்கூடிய நார்ச்சத்து குடல் புறணியை வறட்சியிலிருந்து மீட்க உதவுகிறது. இது தெளிவான குடல் இயக்கங்களுக்கு மேலும் உதவுகிறது.

Abortion at Home : கருக்கலைப்புக்கு வீட்டு வைத்தியம் உண்டா? அது பாதுகாப்பானதா? என்ன செய்யலாம்?

குடல் இயக்கத்தின் வீக்கத்துக்கும் இது உதவுகிறது. மேலும் மலத்தை இறுக்கத்திலிருந்து தளர செய்கிறது.மலத்தில் நீர் அதிகமாக இருப்பதால் இது மலச்சிக்கலை இல்லாமல் செய்து முழுமையாக மலத்தை வெளியேற்றுகிறது. ஓட்ஸ், ஆப்பிள் போன்றவற்றை சேர்க்கலாம்.

​குளுதாதயோன்

samayam tamil Tamil News Spot

ஆக்ஸிஜனேற்ற குளிதாதயோன் குடலின் செல்களை புதுப்பிக்க உதவுகிறது. இது குடல் புறணியின் செல்களை மீட்க உதவுகிறது. ஒவ்வொரு மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு குடல் புதுப்பித்துகொள்கிறது மற்றூம் பெருங்குடல் ஒவ்வொரு நாளும் தன்னை சுத்தம் செய்து கொள்ளும்.

குளுதாதயோன் அதிகம் உள்ள உணவுகளில் ஓக்ரா, அஸ்பாகரஸ், அவகேடோ, காலே போன்றவை உண்டு. குடல் தொடர்பான நிலைமைகளில் சருமம் எதிர்வினைகளை கொண்டிருப்பதால் இந்த ஆக்ஸிஜனேற்றத்தை உட்கொள்வது அவசியம்.

​கற்றாழை

samayam tamil Tamil News Spot

இயற்கை உணவுகளில் கற்றாழைக்கு தனி இடம் உண்டு. தொற்றுநோயை தடுக்க கற்றாழை நல்ல பூஞ்சை எதிர்ப்பு மூலமாகும். இது உயிரணுக்களின் புறணி மீது நல்விளைவை ஏற்படுத்துகிறது மற்றும் குடலை அமைதிப்படுத்துகிறது. இதன் வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் பூஞ்சை பண்புகள் குறிப்பாக கேண்டிடா அல்லது ஈஸ்ட் அதிகரிப்பு நிகழ்வுகளுக்கு உதவுகின்றன.

கற்றாழை வெறூம் வயிற்றில் எடுத்துகொள்ள வேண்டும். 15 மில்லி தண்ணீரில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். மலச்சிக்கல் பூஞ்சை எதிர்ப்பு வளர்ச்சியின் அடிப்படையில் முக்கிய அறிகுறி.

​புரோபயாட்டிக் உணவுகள்

samayam tamil Tamil News Spot

புரோபயாட்டிக் குடலுக்கு நன்மை பயக்ககூடியவை. குடலின் சமநிலையை பராமரிப்பது அவசியம். குடலின் ஏற்றத்தாழ்வு குடல் டிஸ்பயோசிஸ் உண்டாக்குகிறது. இது குடலின் ஆரோக்கியத்தில் மேலும் சிக்கல்களை உண்டாக்கும்.

தயிர் இயற்கை புரோபயாட்டிக் நிறைந்தவை. உடலுக்கு செய்யும் நன்மை பாக்டீரியக்கள் தயிரில் உள்ளன. இது செரிமானக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை தவிர்க்கும்.

​பருவகால பழங்கள்

samayam tamil Tamil News Spot

பருவ காலங்களில் வரக்கூடிய பழங்கள் எல்லாமே குடலுக்கு நன்மை பயக்க கூடியவை. வயிற்றுக்கு ஆரோக்கியமான நார்ச்சத்து உட்கொள்வது முக்கியம். இதை பழங்களிலிருந்து பெறலாம்.

பாலிபினால்கள்,பயோஃப்ளவனாய்டுகளை சேர்க்கலாம். இது குடல் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் சீரான குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது. பழங்கள் குடல்களின் இயக்கங்களை திறம்பட இயக்குகிறது.

​இஞ்சி

samayam tamil Tamil News Spot

குடல் இயக்கத்துக்கு இஞ்சி உதவும். இது அமில ரிஃப்ளக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் செரிமானம் சிறிய அல்லது பெரிய பெருங்குடல் வரை உணவின் இயக்கம் தாமதமாக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பலசாலியாக இருக்க ஆயுர்வேத மருத்துவர் தரும் குறிப்புகள்! தவிர்க்காதீங்க!

இஞ்சி சிறந்த புரோக்கினெட்டிக் ஆகும். இது மலத்தின் இயக்கத்தின் வீதத்தை மேம்படுத்த உ தவுகிறது. மலம் சீராக வெளிவருகிறது

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *