Share on Social Mediaகுழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. குழந்தையின் வளர்ச்சி முழு வீச்சில் இருக்கும். விரைவாக முன்னேறும். இந்த மாதத்தில் முழு உடலையும் அதிகமாக பயன்படுத்துவார்கள். இந்த மாதத்தில் அவர்களது வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

​ஐந்து வார குழந்தை

ஐந்து வார குழந்தையின் எடை அதிகரிக்க தொடங்கியிருக்கும். அவரக்ளது வளர்ச்சி நல்ல விகிதத்தில் இருக்கும். இந்த வாரத்தில் குழந்தையின் எடை 160-200 கிராம் வரை அதிகரிக்கும்.

Autism : ஆட்டிசம் குழந்தைகள் : அறிகுறி, காரணம், சிகிச்சைகள், தீர்வுகள், மருத்துவரது A to Z கைடு!

ஆரம்ப வாரங்களில் வயிறு நேரத்துடன் சேர்ந்து, உடல் வலிமையின் வளர்ச்சி அவரது தலையை உயர்த்துவதை சாத்தியமாக்கும். எனினும் இது நிரந்தரமானது அல்ல. நீங்கள் அவரை உட்கார வைக்கும் போது அல்லது சிறிது நிமிர்ந்து படுக்க வைக்கும் போது குழந்தை ஓரிரு நிமிடங்கள் அதை வைத்திருக்க முடியாது. அதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்.

குழந்தையின் முகபாவனை மாறலாம் குழந்தை தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த நிர்வகிக்கிறது. குழந்தை உங்களை பார்த்து புன்னகைக்கலாம். முதல் முறையாக குழந்தை உங்களை பார்த்து புன்னகைக்கும்.

​குழந்தைக்கு தாய்ப்பால்

samayam tamil Tamil News Spot

இந்த ஐந்தாவது வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதை தொடர்ந்து குழந்தையோடு நீங்கள் என்னவெலாம் செய்கிறீர்கள் என்பதையும் கவனியுங்கள். தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதற்கான வேலையை செய்திருப்பீர்கள். சரியான முறையில் குழந்தைக்கு உணவளிப்பதை புரிந்துகொள்வீர்கள். பாலூட்டும் செயல்முறை இயற்கையானதாக இருக்கலாம். ஆனால் 5 வார குழந்தைக்கு மார்பகத்திலிருந்து தாய்ப்பால் கொடுக்கும் நேரம் சில நேரம் ஆகலாம்.

குழந்தைக்கு பாட்டில் பால் ஃபார்முலா பால் கொடுப்பதாக இருந்தால் பால் கெட்டுப்போகலாம் அல்லது நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் முடிந்தவரை புதிதாக ஃபார்முலா தயாரிக்கப்பட வேண்டும் மேலும் குறைந்தபட்சம் 2-3 பாட்டில்கள், மற்றும் அதன் நிப் 3 வைத்திருப்பதன் மூலம் 10- 15 நிமிடங்கள் வெந்நீரில் நனைத்து மாற்றி மாற்றி கிருமிகளை வெளியேற்றலாம்.

​குழந்தையின் தூக்கம்

samayam tamil Tamil News Spot

குழந்தை தூங்கினாலும் தூங்கும் முறை இன்னும் சரியாக அமையவில்லை. பகல் மற்றும் இரவு வித்தியாசம் அல்லது தினசரி சுழற்சி மூளையில் அமைக்கப்படவில்லை. அதனால் குழந்தை உணவுக்கு பிறகு தூங்காத சில சந்தர்ப்பங்கள் உண்டாகலாம். பகல் அல்லது இரவின் சீரற்ற நேரங்களில் அவர் விழித்திருக்க கூடும்.

குழந்தையின் தூங்கும் திறன் அவர்களை தூங்கவைக்கும் முறையிலும் உண்டு. கோடைக்காலமாக இருந்தால் எளிய பருத்தி துணி போதுமானதாக இருக்கும். குளிர்காலத்தில் பல துணிகளை போர்த்துவதை விட சற்று கனமான ஒரு போர்வை போதும். கழுத்து பகுதியில் இருந்து போர்த்தலாம்.குழந்தையின் வெப்பநிலையை அவ்வபோது கண்டறியவும்.

குழந்தை ஆழ்ந்து தூங்குவது இந்த வாரத்தில் மாறக்கூடும். அவர்கள் உடல் மாற்றத்தை கோருவதால் அவர்களது சுழற்சிகளும் மாறிக்கொண்டே இருக்கலாம்.

​குழந்தையின் நடத்தை

samayam tamil Tamil News Spot

இந்த வயதில் உங்கள் குழந்தை அம்மாவின் முகத்தை நன்றாக கூர்ந்து கவனிக்கும். உங்களை அடையாளம் காண சிறிது நேரம் எடுக்கும். அழகாக புன்னகைக்க தொடங்குவார்கள். குழந்தை சிறிது நேரம் மற்றும் தலை அசைவுகளுடன் உங்களை பின் தொடர்வார்கள்.

Breastfeeding : தாய்ப்பால் வரவில்லையெனில் என்ன செய்ய வேண்டும்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

குழந்தை தூங்கிய பிறகு எழுந்ததும் உங்களை தான் முதலில் பார்க்க பிரியப்படுவார்கள். குழந்தை தாய்ப்பால் வயிறு நிறைந்த நிலையை அளித்தால் உங்களை நிமிர்ந்து பார்த்து சிரிப்பார்கள்.

குழந்தையின் உரையாடல் தடையின்றி தொடரலாம். இந்த மாதத்தில் குழந்தைக்கு வண்ணங்களை அறிமுகப்படுத்தலாம். பிரகாசமான வண்ணங்கள் குழந்தைக்கு விசித்திரமான எதிர்வினைகளை தூண்டலாம். நிறங்களை அடையாளம் காணலாம். கண்டறியாமலும் இருக்கலாம்.

​குழந்தையின் அழுகை

samayam tamil Tamil News Spot

இந்த வயதுக்குள் குழந்தை நன்றாக ஆழமாக சுவாசிக்க கற்றுக்கொள்வார்கள். மேலும் குழந்தையின் அழுகை அளவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்கிறார்கள். வழக்கத்தை விட அதிகமாக அழுவதற்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக 5 வார குழந்தைக்கு தூக்கம் மிகவும் அவசியம் அதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் நீண்ட நேரம் அழுது கொண்டே இருக்கும்.

குழந்தையின் அழுகை தனித்துவமானது. பெரும்பாலான தாய்மார்கள் குழந்தையின் அழுகைக்கான காரணத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போது தான் அழுகையை நிறுத்த முடியும்.

​குழந்தையின் பராமரிப்பு

samayam tamil Tamil News Spot

குழந்தையை தினசரி குளிப்பாட்டுங்கள்.

கோடைக்காலத்தில் வெப்பத்திலிருந்து பாதுகாக்க இரண்டு முறையாவது குளிக்க வையுங்கள்.

வழக்கமான நடைமுறையில் இல்லாவிட்டாலும் குழந்தை குறிப்பிட்ட நேரத்தில் உணவளித்த பிறகு தூங்க செய்யவும்.

குழந்தைக்கு இரவில் தூங்குவதில் சிக்கல் இருந்தால் அனைத்து வகையான தூண்டுதல்களை மேற்கொள்ளவும்.

அறையின் வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் நிலையில் வைத்திருங்கள்.

குழந்தையின் அருகில் இருப்பதை அவர்களை உணர செய்யுங்கள். குழந்தையின் அருகில் இருந்தால் சிறிது நேரத்தில் சோர்வில் அவரே தூங்கிவிடுவார். குழந்தையை உலுக்கி விளையாட வேண்டாம். மென்மையாக தொட்டு விளையாடுங்கள்.

​மருத்துவரை எப்போது அணுகுவது

samayam tamil Tamil News Spot

சோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் அனைத்தும் முடிந்தால் , 6 வாரங்கள் அல்லது 1. 5 மாதங்கள் வரை புதிய தடுப்பூசிகள் எதுவும் செயல்படாது.

குழந்தையின் மலச்சிக்கல் 5 வாரத்தில் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

4 வார குழந்தையின் வளர்ச்சி : குழந்தைகள் உதடு ஓயாமல் சத்தம் இட்டுகொண்டே இருக்கும், கூர்ந்து கவனிக்க தொடங்குவார்கள்!

இந்த வயதில் சில குழந்தைகளுக்கு தொட்டில் தொப்பி இருக்கும் இது தோல் நிலை இதன் விளைவாக குழந்தையின் உச்சந்தலையில் மஞ்சள் செதில்களாக அல்லது உலர்ந்த சருமம் இருக்கும். இந்த தோல் பிரச்சனைகள் காலப்போக்கில் வெளிப்படுவது போல் தோன்றினால் மருத்துவரை அணுகுவது நல்லது.

குழந்தை திடீரென்று ஆர்வத்தை இழக்க தொடங்கினால் குரல் கொடுக்கவில்லை எனில் சோம்பலாக இருந்தால் மருத்துவரை அணுகவும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.