Share on Social Media


அங்கன்வாடி (Anganwadi) என்பது மத்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் ஆகும். இங்கு பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு அங்கன்வாடி மையத்தில் இன்று மதியம் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
 
உடனடியாக குழந்தைகள் நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்ற போது ஆம்புலன்ஸ் திடீரென பழுதாகி நின்றது. பின்னர் குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

ALSO | DMK பிரமுகரை ஆள் வைத்து கொன்ற மகள் கைது

சம்பவம் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்க்கொண்ட மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா  மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்  வில்வநாதன் பின்னர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளிடம் நலம் விசாரித்து, பின்னர் செய்தியாளர்களை மாவட்ட ஆட்சியர் சந்தித்து கூறியதாவது:-

நரியம்பட்டு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் செய்த பின் கடைசி நேரத்தில் உணவில் சிறு பல்லி விழுந்துள்ளது, 24 பேர் அங்கிருந்த நிலையில், 5 குழந்தைகள் மட்டும் உணவு உட்கொண்ட போது, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது, அவர்களுக்கு 24 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் மருத்துவர்கள்  கண்காணிப்பில் உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதே போன்று, கடந்த மாதம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை உட்கொண்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | வால்பாறையில் உடல்நலக் குறைவால் குட்டி யானை உயிரிழப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *