Share on Social Media


அதாவது, கடந்த மார்ச் 27-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக பிப்ரவரி 27-ம் தேதியிலிருந்து பெட்ரோல் விலை உயரவே இல்லை. மேற்கு வங்கத்துக்கும் அசாம் மாநிலத்துக்கும் பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடியும்வரை பெட்ரோல் விலை ஒருமுறை கூட உயரவில்லை. மேலும், ஒருமுறை விலை குறைக்கப்பட்ட அதிசயமும் அப்போது நிகழ்ந்தது. மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது.

எப்படா தேர்தல் முடியும் என்று பல்லைக் கடித்துக்கொண்டிருந்தவர்கள்… மே 4-ம் தேதி பெட்ரோல் விலையை உயர்த்திவிட்டார்கள். அதன் பிறகு, 24 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இப்போது, 108 ரூபாயில் வந்து நிற்கிறது. தேர்தல் நேரத்தில் ஏன் விலைகள் உயரவில்லை? எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விலையைத் தீர்மானிக்கிறன என்றால், சட்டமன்றத் தேர்தல்களுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் என்ன சம்பந்தம்?

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான  போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம்

பெட்ரோல் விலை மட்டுமல்ல… ராஜஸ்தான் மாநிலத்தில் டீசல் விலையும் 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்னும் சில மாதங்களில் 1,000 ரூபாயைத் தாண்டக்கூடிய அபாயமும் இருக்கிறது. பெட்ரோலியப் பொருள்கள் விலைகளில் 60 சதவிகிதம் வரிதான். அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை100 ரூபாயென்றால், அதன் அடக்கவிலை 40 ரூபாய்தான். 60 ரூபாய் வரியாக விதிக்கப்படுகின்றன. வரியைக் கணிசமாகக் குறைத்தால் பெட்ரோலியப் பொருள்களின் விலைகளும் குறைந்துவிடும். மற்றொருபுறம், இந்தியாவில் அடிக்கடி தேர்தல்கள் வந்தால், பெட்ரோல் விலை உயராது என சாமானியர்களின் மனம் குமுறுகிறது. பெருந்தொற்றால் மிகுந்த இன்னல்களைச் சந்தித்துள்ள சூழலில் விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மக்களின் எண்ணம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *