ஹைலைட்ஸ்:
- ஓமைக்ரான் பரவலை அவசர நிலையாக அனைவரும் கருத வேண்டும்
- ஏற்கனவே போடப்பட்ட 2 டோஸ் தடுப்பூசிககளும் ஒமைக்ரானுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்காது
- ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு
ஒமைக்ரான் திரிபு தற்போது 38 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனை பொறுத்தவரை ஒமைக்ரான் தொற்று படு வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள்கொண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, தடுப்பூசி போடும் பணிகளையும் அந்நாட்டு அரசு துரிதப் படுத்தியுள்ளது. மேலும், பூஸ்டர் டோஸ் போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரிட்டனின் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
ஒமைக்ரான் பேரலை விரைவில் வீசும் என்று தெரிவித்த போரிஸ் ஜான்சன், அதை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே போடப்பட்ட 2 டோஸ் தடுப்பூசிககளும் ஒமைக்ரானுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
ஓமைக்ரான் பரவலை அவசர நிலையாக அனைவரும் கருத வேண்டும். கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஓமைக்ரான் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இது கவலைக்குரியது என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற வாஞ்சிநாதர் ஆலயத்தில் அமமுகவினர் சார்பில் சிறப்பு அபிஷேகம்!
முன்னதாக, ஒமைக்ரானை கவலைக்குறியதாக அறிவித்துள்ள உலக சுகாதார மையம், ஒமைக்ரான் திரிபால் வயதானவர்கள் பாதிக்கப்படும் போது அறிகுறிகள் கடுமையானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. முதலில் இந்த திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.