Share on Social Media


1992ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சித்ரா. மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பிரபலம் அடைந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் புகழ்பெற்ற சித்ரா கால்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

2020 டிசம்பர் 9ஆம் தேதி நசரத்பேட்டையில் ஷூட்டிங் அருகே இருந்த ஹோட்டல் அறையில் சித்ரா (Actress VJ Chitra) பிணமாக கிடந்தார்.தொழிலதிபர் ஹேமந்த் ரவியுடன் 2020 ஆகஸ்ட் மாதம் நிச்சயம் செய்துகொண்டார் சித்ரா. 2021 பிப்ரவரியில் திருமணம் நடப்பதாக இருந்தது.

ஆனால், ஹேமந்திடம் விசாரணை செய்தபோது வெளியான தகவல்கள் திடுக்கிடச் செய்தன. திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றுவிட்டதாக அவர் கூறினார்.

ஜனவரி மாதத்தில் பெரிய அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில் சித்ராவின் மரணம் நிகழ்ந்தது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் அறிக்கை கூறுகிறது. தற்கொலைதான் எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Also Read | #VjChitra: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தற்கொலைக்கு காரணம் என்ன?

ஹேமந்தின் சந்தேகப் பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக நண்பர்கள் கூறுகின்றனர்.

சித்ரா கலகலப்பானவர், அனைவருடனும் சுமூகமாகவும், நட்புடனும் பழகுபவர். தைரியமானவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவரும் லாக்டவுனில் வீட்டில் இருந்தபோது, சமூக ஊடகங்கள் டப்-மேஷ் மூலமாக அவர் மிகவும் சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். சித்ராவின் மரணம் சின்னத்திரை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

முல்லை

ஹோட்டலுக்கு வந்தவுடன் தான் குளிக்கப்போவதாக சொல்லிவிட்டு, ஹேமந்தை வெளியே நிற்கவைத்து விட்டு அறையின் கதவை மூடிக் கொண்டார். ஹேம்நாத் அறையின் வெளியே நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார். பிறகு கதவை தட்டியபோது பதில் ஏதும் வரவில்லை. 

mullai

சித்ரா இறந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. சரவணன் மீனாட்சி, சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட தொடர்களில் சித்ரா நடித்திருக்கிறார். 

ALSO READ | முல்லையாக மலர்ந்து ஹோட்டலில் வாடிய மலராய் உதிர்ந்த சித்ரா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.