Share on Social Media


பூமி திரைப்படம், விவசாயத் திருநாளான பொங்கலன்று வெளியாகியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. விவசாயியாகவும், விஞ்ஞானியாகவும் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. விஞ்ஞானம் அறிந்தவர் விவசாயத்தையும் அறிந்திருந்தால் சிந்தனைகள் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு கதைக்களம் துணைசெய்கிறது.

நாசாவில் பணியாற்றும் கதாநாயகன் பூமிநாதன் விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வரும் சமயத்தில் விவசாயிகளின் (Farmers) பிரச்சனைகளைப் பார்த்து, இங்கேயே தங்கிவிடுகிறார். ஆனால், இன்று சொந்தமாக விவசாயம் செய்யும்போது ஏற்படும் பிரச்சனைகளை, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை எப்படி கையாள்கிறார் கதாநாயகன் என்பதே திரைப்படத்தின் கதை.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி கடனால் துன்பத்திற்குள்ளாகும் நிஜமான ஒரு பிரச்சனையை பேசும் திரைப்படம், தற்போது நாடு முழுவதும் தொடரும் விவசாயிகளின் போராட்டத்தின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறலாம் என்று தோன்றுகிறது.

Also Read | அதிரடியான வரவேற்பு! மாஸ்டர் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!

டென்மார்க் நாடு விவசாயம் செய்தே முன்னேறி வருகிறது என்பதை சுட்டிக்காட்டும் பூமி, விவ்சாய நாடான இந்தியாவுக்கும் அதைப் பற்றி உரிய நேரத்தில் உரத்த குரல் எழுப்புவதாகவேத் தோன்றுகிறது. 

விவசாயத்தின் சிறப்பு, அதற்கு எதிரான சதி என்று தொடர்ந்து வசனங்களைப் பேசிக்கொண்டே இருப்பது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரலாம். இமானின் பின்னணி இசை திரைப்படத்திற்கு மெருகூட்டுகிறது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார், திரைப்படத்தில் (Jayam Ravi) சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பூமி படத்தின் வெளியீடு ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானதாக நடிகர் ஜெயம் ரவி தனது டிவிட்டர் (Twitter) பக்கத்தில் தெரிவித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் முதல் தமிழ் படம் பூமி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பூமி திரைப்படம் குறித்து நடிகர் ஜெயம் ரவி (Jayam Ravi) வெளியிட்ட அறிக்கையில், “எனது நீண்ட திரைப்பயணம் முழுக்க ரசிகர்களாகிய உங்களால் உருவானது. பூமி திரைப்படம் எனது 25-வது படம், சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். கொரோனா காலத்தில் ரிலீசாகும் படங்களின் வரிசையில் இப்படமும் இணைந்திருக்கிறது.

உங்களுடன் இணைந்து திரையரங்கில் இந்த படத்தை ரசிக்க நினைத்தேன். ஆனால் இந்த படம் ஓ.டி.டி தளத்தில் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. பண்டிகை காலங்களில் திரையரங்குகளில் எனது படத்தை பார்த்து பண்டிகையை கொண்டாடினீர்கள். இந்த பொங்கல் தினத்தில் திரைப்படம் மூலமாக உங்களை உங்களுடைய வீட்டிலேயே சந்திப்பதை எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக கருதுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

Also Read | தனுஷ், செல்வராகவன் இணைந்து, யுவன் ஷங்கருடன் மிரட்டும் ‘நானே வருவேன்’

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *