Share on Social Media


பொதுவாக மாதவிடாய் நின்ற பிறகு பெண்களின் பாலியல் வாழ்க்கையும் இன்பகரமாக இருக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில் மாதவிடாய்க்கு இனப்பெருக்க ஹார்மோன் சுரப்புகள் குறைவதால் பெண்களுக்கு இயற்கையான பாலியல் ஈர்ப்பு இருக்காது. பெண்கள் ஒரு 40-50 வயதில் மாதவிடாய் நிறுத்தத்தை பெறுகின்றனர். இந்த காலகட்டத்தில் ஹார்மோன் மாற்றங்களால் அவர்களுக்கு மனநிலையில் மாற்றங்கள் உண்டாகிறது.

​மெனோபஸ்

மெனோபஸ் காலகட்டங்களில் வெறுப்பு போன்றவற்றிற்கு அவர்கள் உள்ளாகிறார்கள். பெண்களின் ஹார்மோன் ஆன ஈஸ்ட்ரோஜன் குறைப்பு ஏற்பட்டு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்பு அதிகமாகிறது. இதனால் அவர்களுக்கு பாலியல் வாழ்க்கையில் விருப்பமில்லாத நிலை ஏற்படுகிறது.

மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் பெண்ணுறுப்பு பகுதியில் வறட்சி உண்டாகிறது. எனவே இந்த காலகட்டத்தில் உடலுறவு கொள்வது நிறைய பெண்களுக்கு வேதனை மிகுந்ததாக அமைகிறது.

​வெள்ளைப்படுதல்

samayam tamil Tamil News Spot

மாதவிடாய் நின்ற பிறகு பாலியல் ஹார்மோன் ஆன ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரான் இரண்டுமே வீழ்ச்சி அடைகிறது. இது பெண்களின் பாலியல் வாழ்க்கையை பாதிக்கிறது. இதனால் வலி மிகுந்த உடலுறவு, நிறைய பேர் மாதவிடாய் நிற்கும் காலங்களில் மன அழுத்தம் போன்றவற்றை அனுபவித்து வருகின்றனர். மாதவிடாய் நிற்கப் போகும் கால கட்டத்தில் பெண்கள் வெள்ளைப்படுதல் பிரச்சினையை சந்திக்கின்றனர்.

​ஆரோக்கிய வாழ்க்கை முறை

samayam tamil Tamil News Spot

சில ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களால் உங்க பாலியல் வாழ்க்கையை மீண்டும் உயிர்த்தெழ வைக்க முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது, நல்ல ஆற்றலைப் பெறுதல், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுதல், நன்றாக சாப்பிடுதல் போன்ற விஷயங்களை மேற்கொண்டு வந்தால் மாதவிடாய் நின்ற பிறகும் திருப்திகரமான பாலியல் வாழ்க்கை சாத்தியம். இதன் மூலம் நீங்கள் உடலுறுவில் நெருக்கத்தை உணர முடியும்.

மாதவிடாய் நின்ற பிறகு பெண்ணுறுப்புக்கு இரத்த ஓட்டமானது குறைவாக இருக்கும். இதனால் நீங்கள் உடலுறுவில் உச்சியை அடைவது என்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

​பாலுறவில் கவனம் செலுத்த வேண்டும் :

samayam tamil Tamil News Spot

வயதான பிறகு சிற்றின்ப மசாஜ் மூலம் இன்பத்தை பெறலாம். உங்கள் உடலை தலை முதல் கால் வரை தொட்டு மசாஜ் செய்து சிற்றின்பத்தை பெறலாம். வேண்டுமானால் மசாஜ் செய்ய எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் மாதவிடாய் நின்ற பிறகும் உங்களை எப்படித் தூண்ட விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

​ஆரோக்கியமான பெண்ணுறுப்பு

samayam tamil Tamil News Spot

மாதவிடாய் நின்ற பிறகு பெண்கள் அனுபவிக்கும் பெரிய பிரச்சினை உடலுறவில் வலியை அனுபவித்தல். எனவே உடலுறவு கொள்வதற்கு முன்பு முன் விளையாட்டுகள் மற்றும் ஆசை வார்த்தைகள் போன்றவை உங்க பெண்ணுறுப்பு பகுதியை ஈரமாக வைத்திருக்க உதவி செய்யும்.

உடலுறவுக்கு முன்பு எண்ணெய் போன்ற விஷயங்களைப் பயன்படுத்த மறக்காதீர்கள். உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜன் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். அடிக்கடி அரவணைப்பு, கட்டிப்பிடிப்பு போன்ற விஷயங்களும் உங்க பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த உதவி செய்யும்.

​மாதவிடாய் நின்ற பிறகும்

samayam tamil Tamil News Spot

வயதான பிறகு பெண்கள் பாலியல் உறவில் தூண்டப்படுவது குறைகிறது. இதனால் அவர்கள் பாலியலில் உச்சத்தை அடைவதில் சிக்கல்களை சந்திக்கின்றனர். மன ஈடுபாடும் மற்றும் உடல் தூண்டுதல்களும் உங்களுக்கு உதவி செய்யலாம். உடலுறவு குறித்த யதார்த்தமான பேச்சு மற்றும் வயதாகும் போது நெருக்கத்தை அடைவது குறித்தும் பேசுங்கள்.

​பாலுறவு மூலம் பரவும் நோய்கள்

samayam tamil Tamil News Spot

மாதவிடாய் நின்ற பிறகும் கருவுறுதலுக்கு வாய்ப்பு இல்லை என்றால் கூட ஆணுறையை அணிவது நல்லது. இதன் மூலம் பாலியல் மூலம் பரவும் நோய்களை நம்மால் தடுக்க முடியும். எனவே மாதவிடாய் நின்ற பிறகும் பாலியல் வாழ்க்கையில் கவனமாக இருப்பது அவசியம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.