Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • ஜூனியர் சிருவின் வீடியோவை வெளியிட்ட மேக்னா ராஜ்
  • ஜூனியர் சிரு வீடியோவை பார்த்து ஃபீல் பண்ணும் ரசிகர்கள்
  • ஜூனியர் பிறப்பதற்கு முன்பே மாரடைப்பால் மரணம் அடைந்த சிரஞ்சீவி

தந்தையர் தினத்தை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் தங்கள் அப்பாக்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜூனியர் சிரு தன் அப்பா சிரஞ்சீவி சார்ஜாவின் பட பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கும் வீடியோவை நடிகை மேக்னா ராஜ் வெளியிட்டுள்ளார்.

அந்த செல்லக்குட்டி தன் அப்பாவை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் துக்கம் தாங்காமல் அழுதுவிட்டார்கள். அழுவது போன்ற எமோஜியை பலரும் கமெண்ட் பாக்ஸில் போட்டிருக்கிறார்கள்.

மேக்னா ராஜ் நான்கு மாதம் கார்ப்பமாக இருந்தபோது நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் இறந்து ஓராண்டாகிவிட்டது. தன் காதல் மனைவி கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு வித்தியாசமான முறையில் அறிவிக்க திட்டமிட்டாராம் சிரஞ்சீவி. ஆனால் அந்த அறிவிப்பை வெளியிடும் முன்பே அவர் இறந்துவிட்டார்.

ஜூனியர் சிருவுக்கு புகைப்படத்தை காட்டி இவர் தான் உன் அப்பா என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார் மேக்னா. சிரஞ்சீவியின் புகைப்படத்தை பார்த்து அப்பா, அப்பா என்று குட்டிப் பையன் சொல்வதாக மேக்னா தெரிவித்துள்ளார்.

ஜூனியர் சிருவின் புகைப்படங்கள், வீடியோக்களை மேக்னா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார். அதை பார்த்து தான் சிரஞ்சீவியின் ரசிகர்கள் ஆறுதல் அடைகிறார்கள். சிரஞ்சீவியே மகன் வடிவில் வரப் போகிறார், அதற்காக காத்திருக்கிறோம் என்று அவரின் மாமாவான ஆக்ஷன் கிங் அர்ஜுன் முன்பு தெரிவித்தார்.

சிரஞ்சீவியே மகன் வடிவில் மீண்டும் வந்துவிட்டதாகவே குடும்பத்தாரும், ரசிகர்களும் நம்புகிறார்கள்.
விடிந்தும், விடியாமலும் சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்: என்னாச்சு?





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *