Share on Social Media

இப்படியான சூழலில், “தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்துவிடுவார்கள். தொற்றுக்கு எதிராக எந்தவொரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களும் உயிர்வாழ வாய்ப்பில்லை என்பதை நோபல் பரிசு வென்ற விஞ்ஞானியான வைராலஜிஸ்ட் லூக் மான்டாக்னியர் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களைக் காப்பாற்ற எந்தச் சிகிச்சையும் இல்லை” என்று ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் வைரலாகப் பரவி வருகிறது.

அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் பலரும் அதை ஃபார்வேர்டு செய்தனர். இந்தச் செய்தி உண்மை என நம்பி மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில், அந்தச் செய்தியில் உண்மை இல்லை. அதை லூக் மான்டாக்னியரும் கூறவில்லை என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், பெருந்தொற்றின்போது தடுப்பூசி போடுவதை நினைத்தே பார்க்கக் கூடாது. அது தொற்று வலுவடைய உதவுவதுடன், புதிய வைரஸ் வேரியன்ட்டுகள் உருவாகவும் காரணமாகும் என்றுதான் மான்டாக்னியர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அது வேறு மாதிரி திரிக்கப்பட்டு, தவறான தகவலாகப் பரவி வருகிறது. “வாட்ஸ் அப்பில் பரவும் அந்தச் செய்தி உண்மை இல்லை. அது முற்றிலும் போலியான செய்தி. கொரோனா தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானவை. எனவே, இந்தச் செய்தியை யாருக்கும் பகிர வேண்டாம்” என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB – Press Information Bureau) தெரிவித்திருக்கிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *