Share on Social Media


நாமக்கல்: முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனைக்கு பிறகு ஆவணங்களை எடுத்துச் சென்ற போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகனத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து இன்று (15/12/2021) காலை  நாமக்கல் பள்ளிப்பாளையத்தை அடுத்த ஆலம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுப்பட்டனர்.

ALSO READ | பழிவாங்கும் நடவடிக்கையால் அதிமுகவை அசைத்து விட முடியாது: முன்னாள் முதல்வர் ஆவேசம்

இந்த வழக்கில் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் இரண்டாவது குற்றவாளியாகவும், மனைவி மூன்றாவது மூன்றாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இதனையடுத்து தரணிதரன் வீடு உட்பட முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.  தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா மற்றும் ஆந்திராவில் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் தங்கமணி வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர், ஹார்ட்டிஸ்க் போன்றவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்  கைப்பாற்றிக்கொண்டு செல்ல முற்படும்போது அதிமுகவினர் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் , கே.சி.வீரமணியை ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்ததை தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடத்தியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | கிரிப்டோவில் முதலீடு; அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.