Share on Social Media


சென்னை:  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நான் தமிழன்,கேப்டன் பிரபாகரனை சந்தித்தேன்,ஆமைக்கறி சாப்பிட்டேன், மாட்டுக்கறி சாப்பிட்டேன் , ஏகே 47 எடுத்து வெச்சு சும்மா படபடபடன்னு சுட்டேன் என்றவாறு பல பேட்டிகளில் அளந்து விட்டு சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் செமையாக ட்ரோல் செய்யப்படுவார்.  இருப்பினும் இந்த ட்ரோல்களுக்கெல்லாம் அசராத அவர் போற போக்கில் தன் கற்பனையில் தோன்றுபவற்றையெல்லாம் தனது வாழ்வில் நிஜமாக நடந்தவையாக கூறுவார்,பின்னர் அதனை நெட்டிசன்கள் கலாய்ப்பர்,இது வழக்கமான ஒன்றுதான். 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ, “பிரபாகரனை சீமான் 2 நிமிஷம்கூட சந்திக்கவில்லை, அவர் சொல்வது எல்லாம் பொய், ஆமைக்கறி சாப்பிட்டேன்,ஊமைக்காரி தின்னேன், மாட்டுக்கறி சாப்பிட்டேன், ஆட்டுக்கறி சாப்பிட்டேன் என்றெல்லாம் சொன்னது பொய்.  அங்க புலிகள் எல்லாம் கடும் கோபத்தில் இருக்காங்க. மேலும் எல்லா இடத்திலும் புலிகள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் பேசி ஒன்றும் தெரியாத இளைஞர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார் சீமான்.

ஸ்டெர்லைட்டில் வைகோ பணம் வாங்கிட்டாரு, இப்போ நியூட்ரினோ விவகாரத்தில் வைகோ மகன் பணம் வாங்கிட்டாரு என்று தேவையற்ற பொய்களை சொல்லி அவரது ஆட்களை வைத்து பேச வைத்தார். அன்னைக்கே சிவகாசியில் என் ரவி, எனக்காக, என் குடும்பத்துக்காக தீக்குளித்து இறந்துபோனான். அந்த குடும்பத்தை நான் காப்பாத்தியிருக்கேன்,மாத செலவுக்கு அந்த குடும்பத்துக்கு நான் பணம் தந்திருக்கேன்.  மேலும் இவ்வளவு கேவலமாக மாமாவை பத்தி பேசி வீடியோக்களை போடறாங்களேன்னு சொல்லி என் மனைவியின் அண்ணன் மகன் சரவணசுரேஷ், தீக்குளிச்சு அவனும் இறந்து போனான். என் குடும்பம் ஒரு உயிரை இன்று இழந்து நிற்கிறது ” என்று காட்டமாக கூறியுள்ளார். தற்போது  இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ AIADMK: ஜெயலலிதா சமாதியில் தியானம் கலைந்த சசிகலாவின் அஞ்சலி! நடந்தது என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *