Share on Social Media

சனிக்கிழமையன்று நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் அரையிறுதியில் உக்ரைனை எதிர்த்து 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது இங்கிலாந்து கால்பந்து அணி. தனது அணியின் உத்வேகமே அணியின் வெற்றிக்குக் காரணம் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் (England coach Gareth Southgate) கூறினார்.

ஹாரி கேன் (Harry Maguire) போட்ட இரண்டு கோல்களும், ஹாரி மாகுவேர் (Harry Maguire) ஜோர்டான் ஹென்டர்சன் (Jordan Henderson) போட்ட கோல்களும் 25 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்தை யூரோவின் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறச் செய்தது என்று அணியின் கேப்டன் தெரிவித்தார்.
 
“எங்கள் அணியினர் அருமையாக ஆடினார்கள்” என்று இங்கிலாந்து அணியின் கேட்பன் சவுத்கேட் (England coach Gareth Southgate) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

Also Read | இன்ஸ்டாகிராமில் விராட் கோலியின் ஒரு பதிவின் மதிப்பு என்ன தெரியுமா?

“அணியில் இருந்து வெளியேறிய வீரர்கள் மற்றும் ஆடுகளத்தில் இறங்காத வீரர்கள் பற்றியும் நான் சிந்திக்கிறேன்.

“நாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் கால்பந்து வீரர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இந்த அளவில் ஈடுபாட்டுடன் குழு இயங்குவது மகிழ்ச்சியாக, மதிப்புமிக்கதாக இருக்கிறது. குழுவினர் தங்கள் தனிப்பட்ட விருப்பஙக்ளை தியாகம் செய்தார்கள்.

“இந்த உத்வேகம் காரணமாகவே நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளோம். எங்கள் விளையாட்டின் தரம் முக்கியமானது, ஆனால் வீரர்களிடையே ஒற்றுமையும், உத்வேகமும் இல்லாததால் நிறைய நாட்டின் கால்பந்து அணிகள் வெளியே செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.”

வெம்ப்லியில் செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய டென்மார்க் அணியைபுதன்கிழமையன்று இங்கிலாந்து அணி எதிர்கொள்கிறது.

Also Read | எம்.எஸ்.தோனியிடம் உள்ள சிறந்த கார்களின் தொகுப்பு -வீடியோவை பகிர்ந்த சாக்ஷி

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்த அளவுக்கு இங்கிலாந்து முன்னேறியிருப்பது அந்நாட்டுக்கு மிகப் பெரிய விஷயம். நீண்ட நாட்களுக்குப் பிறகு முக்கிய போட்டி ஒன்றில் இரண்டாவது முறையாக சிறப்பாக ஆடி முன்னேறியிருக்கிறது இங்கிலாந்து கால்பந்து அணி.

“நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது” என்று சவுத்கேட் மேலும் கூறினார். “இன்றிரவு ஆட்டம் முடியும்போதே, நான் அடுத்த சவாலைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டேன். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டி ஆகும். நாங்கள் ஒருபோதும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வந்ததில்லை, இது வரலாற்றை உருவாக்குவதற்கான மற்றொரு வாய்ப்பாகும். இதை நாங்கள் தவறவிடமாட்டோம்” என இங்கிலாந்து கால்பந்து அணி பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் கூறுகிறார்.

Also Read | மீண்டும் தொடங்கும் Ranji Trophy போட்டிகள் 2021-22 தேதிகள் அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *