Share on Social Media

ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் குரோஷியாவை 5-3 என தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளது ஸ்பெயின்.

ஸ்பெயின்

ஸ்பெயின்
Robert Ghement

‘’சுவிட்சர்லாந்து வெம்ப்லிக்குச் செல்ல தகுதியான அணி. உலக சாம்பியன்களையே வெளியேற்றியவர்கள் நிச்சயம் இந்தமுறை கோப்பை வெல்வார்கள். சுவிட்சர்லாந்து தன்னுடைய பலங்களை ஒன்று திரட்டி விளையாடும் அதே நேரத்தில், ஸ்பெயினின் பலவீனங்களையும் பயன்படுத்தி விளையாடும்’’ என்கிறார்கள் சுவிட்சர்லாந்தின் வெற்றியைக் கணிக்கும் நிபுணர்கள்.

‘’ஸ்பெயின் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் 10 கோல்கள் அடித்திருக்கிறது. செம ஃபார்மில் இருக்கும் ஸ்பெயின் நிச்சயம் சுவிட்சர்லாந்தை ஊதித்தள்ளிவிடும்’’ என்பது ஸ்பெயின் அணி ஆதரவாளர்களின் கருத்து.

ஸ்பெயின்

ஸ்பெயின்
Martin Meissner

“பிரான்சுக்கு எதிரான ஆட்டம் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. எனது வீரர்கள் 120 சதவிகிதம் வெற்றிக்காக செயல்பட்டனர். ஸ்பெயினுக்கு எதிராகவும் இதேபோன்ற ஒரு ஆட்டம் இருக்கும்” என்கிறார் சுவிட்சர்லாந்தின் பயிற்சியாளர் விளாடிமிர் பெட்கோவிக். அதன் கேப்டன் கிரானிட் ஷாகாவோ ‘’ பிரான்சுக்கு எதிராக சண்டை செய்ததைப்போல, ஸ்பெயினுக்கு எதிராகவும் ஒரு சண்டை செய்வோம்” என்கிறார்.

ஸ்பெயினின் கோல் கீப்பர் யுனை சிமோன் ” காலிறுதிப் போட்டியில் எங்களை எதிர்த்து விளையாடுவது யார் என்றெல்லாம் நாங்கள் யோசிக்கவே இல்லை. பிரான்ஸ், உக்ரேன், சுவிஸ் என எந்த அணியாக இருந்தாலும் கவலையில்லை. நாங்கள் வெற்றிபெற மட்டுமே இங்கே வந்திருக்கிறோம். எங்கள் லட்சியங்கள் உயர்ந்தது. நிச்சயம் வெற்றிபெறுவோம்” எனப் பேட்டியளித்திருக்கிறார்.

2020 யூரோ கோப்பையின் முதல் காலிறுதிப் போட்டியைக் காண உலகமே பரபரப்போடு காத்துக்கொண்டிருக்கிறது. உங்கள் ஆதரவு மூன்று முறை யூரோ சாம்பியனான ஸ்பெயினுக்கா, முதல்முறை காலிறுதிக்குள் நுழைந்திருக்கும் சுவிட்சர்லாந்துக்கா என கமென்ட்டில் சொல்லுங்கள்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *