Share on Social Media

ஒரு பக்கம், உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், மழை வந்துவிடக் கூடாது என அஞ்சிய ரசிகர்கள், சேனலை மாற்றி, இப்போட்டியில், மழை வந்து விடக்கூடாதா என புலம்பினர். ஆனால், அவர்கள் வேண்டுதல் வேறுவிதமாய் பலித்தது.

எட்டாவது வீராங்கனையாக களமிறங்கிய ராணா, பிரமாதமாக ஆடத் தொடங்கினார். முதல் இன்னிங்சில் இந்தியாவின் டெய்ல் எண்டர்களை, பாக்கெட்டில் மடித்து வைத்துக் கொண்ட இங்கிலாந்தை இவர் கலங்கடித்தார். தோல்வியுற வாய்ப்பில்லை எனினும், வெற்றி வாய்ப்பு, கண்முன் பறிபோவதை எப்படித் தாங்க முடியும் இங்கிலாந்தால்?! எல்லா வழிகளிலும், அவரை வெளியேற்றும் முயற்சி நடக்க, அது நடக்கவில்லை, அவரிடம்.

எட்டு விக்கெட் விழுந்த இக்கட்டான நிலையில், தானியாவுடன் சேர்ந்து அவர் அடித்த, 104 ரன்கள் பார்ட்னர்ஷிப், இங்கிலாந்தின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு, முடியாமல் ஆக்கியது. 80 ரன்களுடன் ராணாவும், 44 ரன்களைச் சேர்த்திருந்த தானியாவும், ‘இன்னும் ஒருநாள் கூட நிற்போம்’ என்னும் தோரணையில் ஆடிக் கொண்டிருக்க, போட்டி டிராவில் முடிவடைந்தது. நான்கு விக்கெட்டுகளை முதல் இன்னிங்சில் எடுத்து அசத்திய ராணா, இரண்டாவது இன்னிங்ஸில், பேட்டால் அணிக்காகப் பங்காற்றினார்.

ENGvIND | Women's Cricket

ENGvIND | Women’s Cricket

மத்திய வரிசை வீராங்கனைகள் சாதிக்கத் தவறிய பட்சத்திலும், ஓப்பனர்கள் மற்றும் பின்வரிசை வீராங்கனைகளால், மேடேறியது இந்தியா. இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்த ஷஃபாலி, ஆட்டநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில், ஃபாலோ ஆனைத் தடுக்கப் போராடிய இந்தியா, பின் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பிக்கப் போராடியது. எனினும், ஷஃபாலி மற்றும் ராணா உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள், டிராவில் கொண்டு வந்து போட்டியை நிறுத்தினர். பார்ப்பவர்களுக்கு போட்டி டிராதானே என்ற எண்ணம் எழலாம். ஆனால், இந்திய அணி சந்தித்த வீழ்ச்சிக்கு, மறுபடியும் சமாளித்து மேடேறியதே மிகப்பெரிய விஷயம்தான்.

ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை மட்டும் கொண்டாடும் உலகிற்கு, தங்கள் இருப்பையும் உரக்க அறிவித்துள்ளார்கள், இந்த இருஅணிப் பெண்களும். நிற்க நேரமின்றி, ஆண்கள் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில், தங்களுக்காக ஒரு போட்டி நடத்துவதற்காகவே போராடும் நிலைதான், இன்னமும் இங்கே பெண்கள் அணிக்கு. இந்நிலை மாறி, டெஸ்ட் போட்டித் தொடராக மாற்றப்பட்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது பெண்களுக்காகவும் நடத்தப்படும் நாளில்தான், பெண்களுக்கான உரிமைகள் பூரணத்துவம் பெறும்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *