Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • எலான் மஸ்க் இதுதொடர்பாக டிவீட் போட்டுள்ளார்.
  • மஸ்க் போட்ட இந்த டிவீட் வைரலாகியுள்ளது.
  • பலரும் இந்த டிவீட்டில் வந்து மஸ்க்கை கலாய்த்து வருகின்றனர்.

பேசாம வேலையை விட்ரலாமான்னு யோசிக்கிறேன் என்று எலான் மஸ்க் டிவீட் போட்டாலும் போட்டார். உடனே ஓடி வந்து கலாய்த்துக் கொண்டிருக்கிறது ஒரு பெரும் கூட்டம்.

எலான் மஸ்க் ஏகப்பட்ட நிறுவனங்களை உருவாக்கி உலக அளவில் கலக்கிக் கொண்டிருப்பவர். டெஸ்லாவின் நாயகன், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் காவலன் என்று பல பதவிகளை வைத்திருந்தாலும் டிவிட்டரில் இவரது கலாய் டிவீட்டுகளுக்காகவே இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் ஜாஸ்தியாகவே இருக்கிறது.

அவ்வப்போது டிவிட்டரில் வந்து யாரையாவது கலாய்த்து விட்டுப் போவார். சமீபத்தில் கூட அமெரிக்க மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சான்டர்ஸ் போட்ட டிவீட்டில் வந்து, நீங்க இன்னும் உயிரோடதான் இருக்கீங்களா என்று கேட்டு பரபரக்க வைத்திருந்தார் மஸ்க்.

அதேபோல அதிரடி டிவீட்டுகளையும் போடத் தவறுவதில்லை மஸ்க். அவரது நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்தும் அதிரடியான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. பன்றி, குரங்குகளிடம் சோதனை முடிந்து விட்டதாகவும், அடுத்த ஆண்டு மனித மூளையில் பொருத்தப் போவதாகவும் இப்போதுதான் அறிவித்துள்ளார் மஸ்க். இந்த நிலையில் திடீரென அவர் போட்டுள்ள ஒரு டிவீட் வைரலாகியுள்ளது.

அதில், பேசாமல் எனது வேலைகளையெல்லாம் விட்டு விட்டு முழு நேர இன்ஃப்ளூயன்சராகி விடலாமா என்று யோசிக்கிறேன். நீங்க என்ன நினைக்கறீங்க என்று டிவீட் போட்டுள்ளார் எலான் மஸ்க். அவ்வளவுதான் வந்து குவிந்து விட்டனர் அவரது “ரசிகர்கள்”.

ஒருவர் வந்து “தல, பேசாம யூடியூப் சானல் ஆரம்பிச்சு பேசுங்க. நான் சப்ஸ்கிரைப் பண்றேன்” என்று கலாய்த்துள்ளார். பலரும் யூடியூப் சானல் ஆரம்பிங்க என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் எல்லாத்தையும் விட்டுட்டா சாப்பாட்டு என்ன பண்ணுவீங்க என்று அக்கறையுடன் கலாய்த்துள்ளனர்.

நம்ம ஊர் தெலுங்குக்காரர் ஒருவர் சூப்பராக கலாய்த்துள்ளார். எங்க ஊரில் வாலன்டியர் வேலை இருக்கு. செய்றீங்களா. எங்க கிராமத்துக்கு வாங்க, வந்து பண்ணுங்க, விருப்பம் இருந்தால் டைரக்ட் மெசேஜ் பண்ணுங்க என்று தெலுங்கிலேயே கேட்டுள்ளார்.

எலான் மஸ்க்

இன்னும் சிலர் சீரியஸாகவே, அவரைப் பாராட்டியுள்ளனர். எத்தனையோ விதமான தாக்கங்களை நீங்கள் ஏற்கனவே பலருக்கு ஏற்படுத்தி விட்டீர்கள். இதற்கு மேல் பெரிய இன்ஃப்ளூயன்சர்ஸ் யாரும் வரப் போவதில்லை என்று அவரைப் பாராட்டியுள்ளனர்.

ஒவ்வொரு துறையிலும் விதம் விதமாக “ரிஸ்க்” எடுக்கும் மஸ்க்குக்கு இப்படியெல்லாம் டிவீட் போடுவது “ரஸ்க்” சாப்பிடுவது போல.. உண்மையிலேயே வேலையை விடப் போகிறாரா அல்லது சும்மானாச்சுக்கும் கலாய்த்தாரா என்பது போகப் போகத் தெரியும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *