Share on Social Media


தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை இசைவாணையை புதுப்பித்தல் (Renewal of Consent) என்று ஒரு விஷயம் இருக்கிறது. அப்படிப் புதுப்பித்தால் மட்டுமே அந்தத் தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட முடியும். தற்போதைய நடைமுறையில் சிவப்பு வகை தொழிற்சாலைகள் ஆண்டுக்கு ஒரு முறையும், பச்சை, ஆரஞ்ச் வகை தொழிற்சாலைகள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையும் இசைவாணையைப் புதுப்பிக்க வேண்டும். ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் அரசாணையின் படி, `சிவப்பு வகை தொழிற்சாலைகள் ஆண்டுக்கு ஒருமுறையும், ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளுக்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்று மாசுக் கட்டுப்பாடு நெறிமுறைகளை வாரியத்துக்குத் திருப்தி தரும் வகையில் செயல்படுத்தும் காலம் வரை ஆண்டுக்கு ஒருமுறையும், பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புதுப்பிக்க வேண்டும். பச்சை வகை தொழிற்சாலைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், தொழிற்சாலைகள் ஒப்புதலுக்கான மொத்த கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்தும் பட்சத்தில், சிவப்பு/ஆரஞ்சு/பச்சை தொழிற்சாலைகள் 5/10/14 ஆண்டுகள் வரை புதுப்பிக்கத் தேவையில்லை’ என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய ஆபத்து” என்றவரிடம், “எப்படி இது ஆபத்தானதாகும்” என்ற கேள்வியை முன்வைத்தோம்.

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை

அதற்கு, “சிவப்பு வகை தொழிற்சாலைகளில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்வார்கள். அப்படி ஆய்வு மேற்கொள்ளும்போது பொறியாளர்கள், விதிமீறல் இருக்கும் விஷயங்களைச் மாற்றச் சொல்வார்கள். ஆனால், தொழிற்சாலை நிறுவனங்கள் பொறியாளர்கள் சொன்னதைச் செய்யாமல் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கும். அப்படியான நிறுவனங்களிடம், சொன்னதைச் செய்தால்தான் இசைவாணையை புதுப்பிப்போம் என்று அழுத்தம் கொடுக்கும்போது, தொழிற்சாலைகள் அதைச் செய்துதான் ஆகவேண்டும் என்கிற கட்டாயத்துக்குத் தள்ளப்படும். உதாரணத்துக்கு, ஒரு தொழிற்சாலையில் பொறியாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது, அதிகம் மாசுபாடு ஏற்படுவதால், இரண்டு ஏர் ஃபில்டர்கள் பொறுத்த வேண்டும் என்று தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் சொல்கிறார்கள். ஆனால், அதை அந்தத் தொழிற்சாலை நிறுவனம் செய்யாமலே தட்டிக்கழித்து வந்தது. அந்தத் தொழிற்சாலை, இசைவாணையின் கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி வாரியத்தை அணுகியபோது, இரண்டு ஏர் ஃபில்டர்கள் வைத்தால் மட்டுமே புதுப்பிப்போம் என்று வாரியப் பொறியாளர்கள் கிடுக்குப்பிடி போட்டார்கள். இதையடுத்து, ஒரு ஏர் ஃபில்டரை மட்டும் பொறுத்திவிட்டு, இன்னொரு ஏர் ஃபில்டருக்கு பதிலாகப் பொறியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து சரிக்கட்டியது அந்த நிறுவனம். இந்தச் சம்பவத்தில், புதுப்பித்தலின் காரணமாக இரண்டு ஏர் ஃபில்டர்கள் வரவேண்டிய இடத்தில் ஒன்றாவது வருகிறதல்லவா, அதற்காகத்தான் புதுப்பித்தலின் கால அவகாசத்தை நீட்டிக்கக்கூடாது என்கிறோம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *