Share on Social Media


தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றி வருபவர் பிருந்தா. தற்போது இவர் முதல் முறையாக இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார். 

இந்த படத்திற்கு ஹே சினாமிகா (Hey Sinamika) என்று டைட்டில் வைத்துள்ளனர், இப்படத்தில் துல்கருக்கு (Dulquer Salmaan) ஜோடியாக பிரபல நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார். இவருடன் பிரபல நடிகை அதிதி ராவ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். துல்கர் சல்மானின் 33வது படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

ALSO READ | திரைக்கதை மட்டும் அமைக்க 3 வருடங்கள்! “குரூப்” பற்றி துல்கர் சல்மான் பூரிப்பு

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சூர்யா மற்றும் ஜோதிகா, அதேபோல் நடிகை நஸ்ரியா மற்றும் நடிகர் பகத் பாசில், நடிகர் ராணா டகுபடி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 

இந்தப்படத்தில் யாழன் எனும் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் ஆர்ஜேவாக நடிக்கிறார் துல்கர். சூப்பர் ஹிட் திரைப்படமான 96 படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஹே சினாமிகா படத்திற்கு இசையமைக்கிறார். ‘ஹே சினாமிகா’ படம் அடுத்தாண்டு பிப்ரவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

முன்னதாக அண்மையில் துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளிலும் வெளியான ‘குருப்’ படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | மீண்டும் உருவாகும் ‘அவள் அப்படித்தான்’; ஸ்ருதி, சிம்பு மற்றும் துல்கர் உடன் பேச்சுவார்த்தை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.