Share on Social Media


சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘டாக்டர்’ படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்‘ படத்தில் நடித்து வந்தார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் துவங்கியது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் ‘டான்’ படத்திற்கான பூஜை போடப்பட்டு, முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்தப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடேக்சன்ஸ் தயாரித்து வருகிறது.

இது நியாயமா?: அஜித்தை கடுமையாக விமர்சித்த ‘ஆன்டி இண்டியன்’ பட தயாரிப்பாளர்!
அண்மையில் ‘டான்’ படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். இது சமபந்தமான புகைப்படமும் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் ‘டான்’ பர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.

அதன்படி தற்போது ‘டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகியுள்ளது. டங்காமாரி ஊதாரி மற்றும் ஆலுமா டோலுமா பாடல்கள் புகழ் ரோகேஷ் எழுதியுள்ள “ஜலபுலஜங்கு” பர்ஸ்ட் சிங்கிளை அனிருத் பாடியுள்ளார். ‘டான்’ படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பாரக்கப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.