Share on Social Media


சென்னை: மிகப்பெரிய மருத்துவ சாதனையாக, கடுமையான கல்லீரல் செயலிழப்பு காரணமாக கோமா நிலைக்கு சென்ற 26 வயதான இளைஞருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

நோயாளியான, ராகுல் காந்தி, நல்ல உடல் ஆரோக்கியம் கொண்ட  கபடி வீரர். ஆனால் அவரது கல்லீரல் செயலிழந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். கோவிட் -19 தொற்று பாதிப்பு இருந்ததாக,  உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், அவர் சுமார் 48 மணிநேரத்திற்கு மேல் உயிருடம் இருக்க முடியாது என்பது மருத்துவ நிபுணர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது.

நோயாளிக்கு கொரோனா நோய் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருந்ததால், சிகிச்சை மிகவும் சிக்கலானதாக, சவாலானதாக இருந்தது.  எம்.ஜி.எம் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தொற்று ஏற்படும் அபயாம் அதிகம் இருந்ததால், மிகவும் எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தது.

ALSO READ | நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயார்: யோகா குரு பாபா ராம்தேவ் 

கொரோனா நெருக்கடி மிகவும் அதிகமாக இருந்த அந்த நேரத்தில், நோயாளிக்கு அதிர்ஷ்டவசமாக, அவரது உடம் பிறந்த சகோதரர் கல்லீரலை தானம் கொடுக்க முன் வந்தார்.

கல்லீரலை தானம் செய்பவரருக்கு மருத்துவ பரிசோதனை செய்து,  முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மொத்தம் 50 மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட இரண்டு அணிகள் 12 மணி நேர அறுவை சிகிச்சை நடைமுறையை இரண்டு தனித்தனி ஆபரேஷன் தியேட்டர்களில் நிகழ்த்தின – ஒன்றில் கோவிட் -19 நேர்மறை நோயாளிக்கும், மற்றொன்று கல்லீரலை தானமாக கொடுப்பவருக்கும்  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

கோவிட் -19 நோயால் மருத்துவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு பில்டர்கள் மற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டன. அறுவை சிகிச்சை நடைமுறைக்குப் பிறகு, மருத்துவர்கள் அல்லது சுகாதாரப் பணியாளர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று மருத்துவமனை கூறியுள்ளது. 

நோயாளி அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பி விட்டார். எம்.ஜி.எம் ஹெல்த்கேர் (MGM healthcare ) மருத்துவர்கள், மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் இயல்புவாழ்க்கையை வாழ முடியும் என்றும், சுமார் ஒரு வருட காலத்தில் கபடி விளையாடுவதை மீண்டும் தொடங்கலாம் என்றும் கூறினார்.

மிகவும் ஆரோக்கியமான விளையாட்டு வீரருக்கு இதுபோன்ற திடீர் கடுமையான கல்லீரல் செயலிழப்புக்கான காரணங்கள் குறித்து கேட்டபோது, ​​எம்.ஜி.எம் ஹெல்த்கேரின் மூத்த மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தியாகராஜன் சீனிவாசன், “கடுமையான கல்லீரல் செயலிழப்புக்கான பொதுவான காரணங்கள் காசநோய், ஹெபடைடிஸ் ஏ, ஈ, பி  ஆகியவற்றுக்கான எதிர்ப்பு மருந்துகளை அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்ளுதல், அல்லது சில ஆயுர்வேத மருந்துகளை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்ளுதல் ஆகிடயவை காரணமாக இருக்கலாம் ”என்று அவர் ஜீ மீடியாவிடம் தெரிவித்தார்.

கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும், தடுப்பூசி போடவும், COVID-19 விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ALSO READ | Covaxin Vs Covishield: ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *