Share on Social Media


மொபைலை ஒரே கையில் பிடித்துக்கொண்டிருந்தால் விரல்கள் இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன. இதற்கு என்ன காரணம்… சரிசெய்ய முடியுமா?

– சதீஷ் (விகடன் இணையத்திலிருந்து)

நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி

நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி.

“செல்போனை பிடித்தபடி பேசும்போது அதன் ஒரு முனை மணிக்கட்டுப் பகுதியில் படும். மணிக்கட்டின் நடுப்பகுதியில் மீடியன் நரம்பு என ஒன்று இருக்கும். மொபைல்போனில் பேசும்போது அந்த நரம்பு அழுத்தப்படலாம்.

அந்தப் பகுதியின் மேல் பகுதியைப் பாதுகாக்கும்படி எலும்பு எதுவும் இருக்காது. மென்மையான திசுக்கள் மட்டுமே இருக்கும். மீடியன் நரம்பு அழுத்தப்படுவதால் கட்டைவிரல் மற்றும் அதையடுத்து மோதிரவிரல் வரைகூட இந்த இழுத்துப் பிடிக்கும் உணர்வு வரும். ஹைப்போ தைராய்டு பாதிப்புள்ளவர்களுக்கு விரல்கள் பிடித்துக்கொள்ளும் இந்தப் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.

செல்போனை கையில் வைத்துப் பேசும்போது அதை விரல்களில் மட்டும் பிடித்தபடியும், மீடியன் நரம்பை அழுத்தாமலும் உபயோகிக்க வேண்டும். நீண்டநேரம் மொபைல் போனை கையில் வைத்துப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு இது உதவும். நீண்டகாலமாக செல்போன் உபயோகித்ததன் விளைவாக, நீண்டகால வலியை அனுபவிப்பவர்களுக்கு சில டெஸ்ட்டுகள் தேவைப்படும். முதல் கட்டமாக `நர்வ் கண்டக்ஷன் ஸ்டடி’ (Nerve conduction study) என்பது மேற்கொள்ளப்படும்.

கரன்ட் ஷாக் கொடுத்து, நரம்பில் அது எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பது பதிவுசெய்யப்படும். மணிக்கட்டின் மேல் ரிசீவர் போன்ற ஒன்றை வைத்துவிட்டு, அதன் மேல் கரன்ட் வைத்து தூண்டப்பட்டு இது செக் செய்யப்படும். அந்த வேகம் குறைவாக இருக்கும்பட்சத்தில்தான் விரல்களில் இதுபோன்ற வலி, இழுக்கும் உணர்வு போன்றவை வரும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *