Share on Social Media


பிரசவத்திற்குப் பிறகு எனக்கு மாதவிடாய் வரவில்லை. என்ன காரணம்? இந்தப் பிரச்னையை சரி செய்ய என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?

– சந்தியா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி

மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

“பிரசவத்துக்குப் பிறகு உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டும் கொடுக்கும் பட்சத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு உங்களுக்கு மாதவிடாய் வராமலிருப்பது சகஜம்தான். அதாவது குழந்தைக்கு எல்லா நேரமும் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது. தண்ணீர், ஃபார்முலா ஃபீடு எனப்படும் குழந்தை உணவு உள்ளிட்ட எதையும் கொடுக்காமல் வெறும் தாய்ப்பால் மட்டும் கொடுப்பது.

குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு அரை திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கும்வரை இது தொடரலாம். தாய்ப்பால் சுரப்பைத் தூண்டக்கூடிய புரொலாக்டின் என்ற ஹார்மோன் சுரப்பால் பெண் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஆகியவற்றின் சுரப்பு குறையும். அதனால் உங்களுக்கு மாதவிடாய் வராது.

உங்கள் கேள்வியில் பிரசவமாகி எத்தனை மாதங்கள் ஆகின்றன என்ற தகவல் இல்லை. ஒருவேளை ஒரு வருடத்துக்குள் பிரசவமாகியிருந்தால் காத்திருக்கலாம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.