Share on Social Media


ஐந்து வருடங்களுக்கு முன் பித்தப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அதிலிருந்து எனக்கு செரிமானம் சீராக இல்லை. வயிற்றெரிச்சல் இருக்கிறது. பித்தப்பையை நீக்கியதுதான் பிரச்னையா?

– சங்கரி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சக்திவேல்

மருத்துவர் சக்திவேல்

பதில் சொல்கிறார், திருச்சியைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் சக்திவேல்.

“உங்களுக்கு எந்தக் காரணத்துக்காக பித்தப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்தார்கள் என்று தெரிய வேண்டும். பெரும்பாலானவர்களுக்கும் பித்தப்பையில் கற்கள் சேரக் காரணமே அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதுதான். கொழுப்பை செரிக்கவைப்பதுதான் பித்தப்பையின் வேலையே. அளவுக்கதிகமான கொழுப்பு சாப்பிடும்போது பித்தப்பை வீங்கி, கற்கள் உருவாகி, ஒரு கட்டத்தில் பித்தப்பையையே அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்.

40 வயதில் ஒரு பெண் உடல் பருமனோடு இருந்தால் அவருக்கு பித்தப்பை கற்கள் வரும் என்று மருத்துவத்தில் சொல்வதுண்டு. மருத்துவத்தில் Female, Fertile, Fat, Fair, and Forty என இதை 5 F’s என்றே குறிப்பிடுவதுண்டு.

பெரும்பாலும் பெண்களை பாதிக்கும் பிரச்னை இது. அதிலும் குறிப்பாக 40 வயதுக்கு மேலான, பருமனான பெண்களைக் குறிவைப்பது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.