Share on Social Media


இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்க வேண்டுமா? வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமா?

– பரத் (விகடன் இணையத்திலிருந்து)

பூங்குழலி

பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

“இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் எம்ஆர்என்ஏ (mRNA) வகை தடுப்பூசிகளான ஃபைஸர், மாடர்னா, அடினோவைரஸ் வகை தடுப்பூசியான கோவிஷீல்டு, இன்ஆக்டிவேட்டடு வகை தடுப்பூசியான கோவாக்சின் என எதுவாக இருந்தாலும் கோவிட் தொற்று தீவிரநிலையை அடையாத அளவுக்குப் பாதுகாப்பளிக்கும். கிட்டத்தட்ட ஒரு வருடமாகத் தடுப்பூசிகள் போடப்படுவதில் நமக்குக் கிடைத்த தகவல் இதுதான்.

எந்தத் தடுப்பூசியானாலும் இரண்டு டோஸ்களும் போடப்பட்ட இரண்டு வாரங்கள் கழித்துதான் முழுமையான பாதுகாப்பு நமக்கு கிடைக்கும்.

அதனால்தான் எல்லோரையும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் தவறாமல் செலுத்திக்கொள்ள வலியுறுத்துகிறோம். கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் சரி, போட்டுக்கொள்ளாதவர்களும் சரி, ஒரே ஒரு டோஸ் மட்டும் செலுத்திக்கொண்டவர்களும் சரி… அவர்களது நோயின் தீவிரத்தைப் பொறுத்து, மருத்துவரின் அறிவுரையின்பேரில்தான் எப்படிப்பட்ட சிகிச்சையை மேற்கொள்வது என்று முடிவு செய்ய வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *