Share on Social Media


தடுப்பூசி போடப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகே அதன் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். இந்நிலையில் நமக்கு உறுதியாகத் தெரிந்த பாதுகாப்பு என்றால் மாஸ்க் அணிவது. சரியான மாஸ்க்கை முறையாகவும் முழுநேரமும் அணிய வேண்டியது மிக முக்கியம். மாஸ்க் அணிவதில் பெரும்பாலானோருக்கும் ஒருவித அலட்சியம் வந்துவிட்டதைப் பார்க்க முடிகிறது.

எது சரியான மாஸ்க், அதைச் சரியாக அணிவது எப்படி என்பதை விளக்கும் வீடியோக்களும் செய்திகளும் உலகசுகாதார நிறுவனத்தின் இணைய தளத்தில் இருக்கின்றன. மூக்கையும் வாயையும் மூடியபடி மாஸ்க் அணிய வேண்டும். பேசும்போது மாஸ்க்கை இறக்குவது தவறு. வீட்டில் வயதானவர்கள், அதிக ரிஸ்க் பிரிவில் உள்ளோர், குழந்தைகள் இருந்தால், உடனிருப்போர் வீட்டுக்குள்ளேயும் மாஸ்க் அணிவது பாதுகாப்பானது. ஹோட்டல், திருமண மண்டபம், குளிரூட்டப்பட்ட இடங்கள் போன்று மக்கள் கூடும் இடங்களில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட இடங்களிலும் மாஸ்க் மட்டுமே பாதுகாப்பளிக்கும்.

Indians wearing face masks

Indians wearing face masks
AP Photo/Channi Anand

தேவைப்பட்டால் என்95 மாஸ்க் அணியலாம். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும். அந்த இடத்தில் இருக்கும் நேரம்வரை இதை மறக்கக் கூடாது. நோய்த்தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளும் எளிய வழியும் இதுதான். இதன் மூலம் நமக்கும் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும். நம்மிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்று பரவாமலும் காக்க முடியும். எனவே, எக்காரணம் கொண்டும் மாஸ்க் அணிவதை நிறுத்திவிடாதீர்கள்.”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.