Share on Social Media


என் வயது 40 வயது. சமீபத்தில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்தபோது டிரெட்மில் டெஸ்ட்டில் அப்நார்மல் ஹார்ட் பீட் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அசாதாரண ஹார்ட் பீட் என்பது ஆபத்தானதா? அது எதை உணர்த்துகிறது?

– அண்ணாமலை (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருணாசலம்

மருத்துவர் அருணாசலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

“இதயத்தின் முறையற்ற துடிப்பு, அரித்மியா (Arrhythmia) என்று சொல்லப்படும். இதயம் ஒரே மாதிரி வேகத்தில், அதாவது ஒரு நிமிடத்துக்கு 70 முதல் 90 முறை வரை துடிப்பது சாதாரணமானது. 100 முறைக்கு மேல் சமச்சீரன்றி துடிப்பதை டாகிகார்டியா (Tachycardia) என்பார்கள். காரணமே இல்லாமல் இதயம் வேகமாகத் துடிப்பது நல்லதல்ல. அரித்மியா பாதிப்புக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

60-க்குக் கீழே துடித்தால் அதை பிராடிகார்டியா ( Bradycardia ) என்பார்கள். எனவே இதயத் துடிப்பானது சீரான இடைவெளியில் ஒரு ரிதத்துடன் இருக்க வேண்டும். இதயத்தின் இயல்பான செயல்பாடு தடுமாறும்போதோ, கிருமித் தொற்றினாலோ இது போன்ற மாற்றங்கள் ஏற்படலாம்.

இதயம் வேகமாகவோ, மெதுவாகவோ துடிப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதற்காகவே இப்போது இதயநோயியலில் ஒரு பிரிவினராக எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் எனப்படும் நிபுணர்கள் இருக்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *