Share on Social Media


கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் மயக்க மருந்து கொடுத்துச் செய்யப்படுகிற அறுவை சிகிச்சைகளைச் செய்து கொள்ளக் கூடாது, அது உயிருக்கே ஆபத்தானது என்று சொல்லப்படுவது உண்மையா? எனக்கு பல் அறுவைசிகிச்சை நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? இது பல் ஆபரேஷனுக்கு மட்டும் பொருந்துமா அல்லது அனஸ்தீசியா கொடுத்துச் செய்யப்படுகிற அனைத்து ஆபரேஷன்களுக்குமானதா?

– மதுமிதா (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி

டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

“கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டு ஒரு வாரம் கழித்து எந்தவிதமான அறுவைசிகிச்சையையும் செய்துகொள்ளலாம். ஏதேனும் அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திலிருப்போருக்கு, அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு மருத்துவர்களும் வலியுறுத்துவோம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *