Share on Social Media


என் வயது 34. இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது. பிரசவமாகி இரண்டு வருடங்கள் கழித்தும் என் வயிறு 6 மாத கர்ப்பம்போலவே இருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லோரும் அது குறித்துக் கேட்கும்போது தர்மசங்கடமாக இருக்கிறது. சிசேரியன் பிரசவம் என்பதால் டெலிவரி ஆன உடனேயே என்னால் எந்த உடற்பயிற்சியையும் செய்ய முடியவில்லை. இப்போது அதை சரிசெய்யவே முடியாது என்கிறார்கள். வயிற்றைக் கட்டுவது பலன் தருமா?

– மைத்ரேயி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

“கர்ப்பகாலத்தில் ஒரு பெண் சராசரியாக 11 முதல் 15 கிலோவரை எடை கூடுவாள். குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப வயிறு விரிந்துகொடுத்து உதவும். குழந்தை பிறந்ததும் உங்கள் எடையும் குறையும், வயிறும் படிப்படியாகக் குறையத் தொடங்கும். வயிறானது எலாஸ்டிக் போன்றது. ரப்பர் பேண்டை கற்பனை செய்துகொள்ளுங்கள். அது பலமுறை ஸ்ட்ரெச் செய்யப்பட்ட பிறகு மீண்டும் தன் பழைய நிலைக்கு வர வாய்ப்பே இல்லை. அது ஓரளவுக்குத்தான் சாத்தியம். அதுபோலதான் வயிறும்.

நம் வயிற்றில் இரண்டுவகையான தசைகள் உள்ளன. அவைதான் வயிற்றுப்பகுதியின் இறுக்கத்தைத் தீர்மானிப்பவை. அந்தத் தசைகளை நீங்கள் டோன் செய்வதன் மூலம் ஓரளவுக்கு உங்கள் வயிற்றுப் பருமனைக் குறைக்க முடியும். அதற்கென்றே பிரத்யேக உடற்பயிற்சிகள் நிறைய உள்ளன.

உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அந்தப் பயிற்சிகள் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு செய்ய ஆரம்பிக்கலாம். வயிற்றைக் கட்டுவது இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *