Share on Social Media


என் வயது 34. கடந்த சில மாதங்களாக கழுத்துவலி இருக்கிறது. முதலில் சாதாரண மருத்துவரை அணுகினேன். அவர் கொடுத்த பெயின் கில்லரில் சரியாகாததால் எலும்பு மருத்துவரை சந்திக்கச் சொன்னார். எலும்பு மருத்துவரையும் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன். வலி குறையவில்லை. `இது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கும்…. நரம்பியல் மருத்துவரைப் பார்’ என்கிறான் என் நண்பன். கழுத்துவலிக்கு நரம்பு மருத்துவரைப் பார்ப்பது சரியானதா?

– விக்ரம் (விகடன் இணையத்திலிருந்து)

நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி

நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி.

“கழுத்துவலி என்பது பெரும்பாலும் சரியான நிலைகளில் உட்காராதது, நிற்காதது, டி.வி மற்றும் கம்ப்யூட்டர் திரைகளைப் பார்க்கும்போது கழுத்தை சரியாக வைத்துக்கொள்ளாதது போன்ற காரணங்களால் வரக்கூடும். நம் உடலில் கழுத்து மிக முக்கியமான ஒரு பகுதி. மூளையிலிருந்து கைகளுக்குச் செல்லும் நரம்புகள் எல்லாமே கழுத்துப் பகுதியில் தொடங்கும் முதுகெலும்பு இடைவெளி வழியேதான் வரும். கைகளுக்குச் செல்லும் அந்த நரம்புகள் மிக முக்கியமானவை. அதே போன்ற ஒரு செட் நரம்புகள் கால்களுக்கு வரும். இந்த இரண்டு செட் நரம்புகளுமே மிக முக்கியமானவை. கழுத்தெலும்பு மிக மென்மையாக இருக்கும். நரம்புகள் வரும் அந்த இடைவெளியும் சிறியதாக இருக்கும். எனவே ஒருவர் அசாதாரண நிலைகளில் (posture) கழுத்தை வைத்துக்கொள்ளும்போது அந்த நரம்புகள் அழுத்தப்படும். மனித உடலில் முக்கியமான முதுகெலும்புப் பகுதிகூட கழுத்திலிருந்து தொடங்கிதான் கீழ்நோக்கிப் போகும். உட்காரும், நிற்கும் நிலைகள் தவறாக இருந்தால், முதுகெலும்பு பகுதியும் பாதிக்கப்படலாம். முதுகெலும்பில் உள்ள டிஸ்க் எனப்படும் வட்டுப் பகுதியோ தசைநார்களோ பாதிக்கப்படலாம்.

இப்படி நேரும்போது நரம்புகள் அழுத்தப்படும் அல்லது முதுகெலும்பு அமுக்கப்படும். இத்தகைய பிரச்னையில் எலும்புகளைவிட நரம்புகளின் பாதிப்புதான் பிரதானமாக இருக்கும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.