எனக்கு கர்ப்பப்பை வாயில் போடப்பட்ட தையல் பிரிந்துவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும்?
– நந்தினி சிவா (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர்.கார்த்திகா.
“சர்விகல் சர்க்ளாஜ் (Cervical cerclage) என்பது கர்ப்பப்பை வாயை மூடுவதற்காகப் போடப்படும் தையல். கர்ப்பம் தரித்த நான்கைந்து மாதங்களில், கருவின் எடை தாங்காமல் கர்ப்பப்பை வாய் திறந்துகொள்கிறவர்களுக்கும், பலமுறை டி அண்ட் சி செய்யப்பட்டதால் கர்ப்பப்பை வாய் சிதைந்தவர்களுக்கும், கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களுக்கும் இந்தத் தையல் தேவைப்படலாம். இந்தத் தையல் விட்டுப்போனதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
வழக்கமாக இந்தத் தையலை அடிவழியேதான் போடுவார்கள். அப்படிப்போடும்போது அது தோல்விடைய வாய்ப்புகள் உண்டு.