Share on Social Media


உலகம் முழுக்க பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. அதன் விளைவாக அவர்களில் பலரின் நடவடிக்கைகளிலும் மாற்றங்களைப் பார்க்கிறோம். `தடுப்பூசிதான் போட்டாச்சே… இனிமே எங்கே வேணா போகலாம், மாஸ்க் இல்லாம இருப்போமே….’ என்று அவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடும். அந்த நிலையில் ஒருவேளை ஓமிக்ரான் பரவத் தொடங்கினால் அதன் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும். அதைத் தடுக்க வேண்டும் என்றால் எப்போதும்போல கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் பரவினால், அதன் விளைவாக தீவிரமான நோய்கள் பாதிக்குமா என்பதே பலரின் கேள்வியும். கொரோனாவின் முந்தைய அலைகளில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளையும், இணைநோய் உள்ளவர்களுக்கு அந்த பாதிப்புகள் சற்று தீவிரமாக இருந்ததையும் பார்த்திருக்கிறோம்.

COVID-19 patient/ Representation Image

COVID-19 patient/ Representation Image
AP Photo / Jae C. Hong

நுரையீரல் பாதிக்கப்பட்டு, கோவிட் நிமோனியா பாதித்து ஐசியூ வரை சென்றவர்களையும் பார்த்தோம். ஒமிக்ரானும் அதே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துமா என்று பலரும் கேட்கிறார்கள். இன்றுவரை தினமும் கோவிட் பாதித்தவர்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அவர்களில் யாரும் தீவிர பாதிப்புக்குள்ளாவதில்லை. காரணம் தடுப்பூசி. தடுப்பூசி போடப்பட்டதால் அவர்களது உடலில் ஆன்டிபாடி உருவாகியிருக்கிறது. அது தரும் பாதுகாப்பால் நோய் தீவிரமாவது தடுக்கப்படுகிறது. அதே ஆன்டிபாடி, ஓமிக்ரான் தொற்றிலிருந்தும் பாதுகாக்குமா என்பது குறித்த தகவல்கள் நம்மிடம் இல்லை. இந்த உருமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டு வெகு சில நாள்களே ஆவதால் இன்னும் 2- 3 வாரங்களுக்குப் பிறகு சரியான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *