Share on Social Media


நான் ஒரு பிசினஸ்மேன். வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை டிராவல் செய்பவன். பயணம் செய்பவர்களுக்கு ஏர்போர்ட்டில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கச் சொல்கிறார்கள். அவர்களுடன் மற்றவர்களும், அதாவது தொற்று இல்லாதவர்களுக்கும் இருக்கலாமல்லவா… அப்படிக் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கும், அந்தப் பகுதியில் நடமாடுபவர்களுக்கும் இதன் மூலம் தொற்றுப் பரவ வாய்ப்புள்ளதா? அடிக்கடி ஆர்டி பிசிஆர் டெஸ்ட் எடுப்பது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாதா?

– அப்துல் காலிக் (விகடன் இணையத்திலிருந்து)

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

“உங்கள் கவலை நியாயமானதே… நீங்கள் குறிப்பிடும்படி விமானநிலையத்தில் காத்திருக்கும் பகுதியில் எல்லோரும் அதிகபட்ச பாதுகாப்புடன் இருக்க வேண்டியது மிக முக்கியம். அந்தப் பகுதியில் ஒவ்வொருவரும் தனிமனித இடைவெளியை அவசியம் பின்பற்றியே தீர வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *