Share on Social Media


தினமும் இரவு எவ்வளவு நேரம் தூங்கினாலும் மறுநாள் தூங்கி எழுந்திருக்கும்போது புத்துணர்வாக உணர முடிவதில்லை. மீண்டும் சோர்வாகவும் தூக்கக்கலக்கமாகவுமே உணர்கிறேன். புத்தகம் படிக்கும்போதும் லேப்டாப்பில் வேலை பார்க்கும்போதும் உடல் மிகவும் சோர்வாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்… பலவருடமாக இப்படித்தான் உணர்கிறேன். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?

– சூரியகாந்த் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் கே. பாஸ்கர்

மருத்துவர் கே. பாஸ்கர்

பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே.பாஸ்கர்.

“பொதுவாக, சோர்வுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை, தைராய்டு பிரச்னை, மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடல் சோர்வு உண்டாகலாம். தவிர டிபி எனப்படும் காசநோய், புற்றுநோய் போன்றவைகூட உடல் சோர்வை ஏற்படுத்தும். இது நாளாக, ஆக மிகவும் மோசமாகிக்கொண்டே போகும். எனவே, சாதாரண அசதி, களைப்பு, சோர்வு என உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக்கொள்ளாமல், முதலில் உங்கள் குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

அவரது அறிவுறுத்தலின் பேரில் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு, அதில் FBC, B12, Ferritin, Vitamin D, TSH, U& E, HBA1C, LFT, CRP போன்றவற்றின் அளவுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.