Share on Social Media


தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்று கேள்விப்படுகிறோம். தடுப்பூசியைத் தாண்டியும் தொற்று பரவும்போது, இனி தடுப்பூசி தேவைப்படாதா?

– மகேஷ் (விகடன் இணையத்திலிருந்து)

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

“இந்த விஷயத்தில் நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்… ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மிகவும் குறைவான அறிகுறிகளே காணப்படுகின்றன. இது நமக்கெல்லாம் ஆறுதலான செய்தி. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் ஒமிக்ரான் தொற்று பரவுவது உண்மைதான்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏற்படும் தொற்றானது `பிரேக்த்ரூ இன்ஃபெக்ஷன்’ எனப்படுகிறது. அப்படி ஏற்படும் தொற்று, தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதனால்தான் இரண்டு டோஸ் தடுப்பூசியைத் தவறாமல் போட்டுக்கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை சதவிகிதம் பேருக்கு, அதைத் தாண்டி தொற்று ஏற்படுகிறது என்ற புள்ளிவிவரம் நம்மிடம் இல்லை.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.