Share on Social Media


பெண்களின் இனப்பெருக்கப் பாதையில் ஏற்படும் ஃபங்கல் இன்ஃபெக்ஷனுக்கு என்ன காரணம்…. அதற்கு சிகிச்சைகள் உண்டா?

– சௌமியா வடிவழகன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி

மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

“வெஜைனல் கேண்டிடியாசிஸ்(Vaginal Candidiasis ) எனப்படும் பூஞ்சைத் தொற்றானது, நான்கு பெண்களில் மூன்று பேருக்கு அவர்களின் வாழ்நாளில் ஏதேனும் ஒரு காலத்தில் கட்டாயம் வரலாம். இதை நாம் பால்வினை நோய் என்று குறிப்பிடுவதில்லை என்றாலும், தாம்பத்திய உறவு மூலம் இந்தத் தொற்றுப் பரவல் அதிகமாகும்.

இந்தத் தொற்று ஏற்பட்ட பெண்களுக்கு தயிர் போல திரிதிரியாகவும் கெட்டியாகவும் வெள்ளைப்படுதல் இருக்கும். சிலருக்கு அரிப்பும் எரிச்சலும் இருக்கலாம். வெஜைனாவில் வீக்கம், ரேஷஸ் எனப்படும் தடிப்புகள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்றவை இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் மகப்பேறு மருத்துவரை அணுகி, வெஜைனல் கேண்டிடியாசிஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று உறுதிசெய்துகொள்ளலாம்.

ஒருவேளை இந்த அறிகுறிகள் தீவிரமாக இருந்தாலோ, வழக்கமாக இந்தத் தொற்றுக்குக் காரணமான கேண்டிடா ஆல்பிகன்ஸ் (Candida albicans) என்ற பூஞ்சை தவிர்த்து, வேறு பூஞ்சையினால் தொற்று ஏற்பட்டிருந்தாலோ, வருடத்தில் நான்கைந்து முறை இதுபோன்ற தொற்றுக்கு உள்ளாகியிருந்தாலோ, கர்ப்பகாலத்தில் தொற்று வந்தாலோ, இந்தத் தொற்றுடன் நீரிழிவும் கட்டுப்பாடின்றி இருந்தாலோ, எதிர்ப்புசக்தி குறைவாக இருந்தாலோ அதை சிக்கலான பூஞ்சைத் தொற்று என்று சொல்வோம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *