Share on Social Media


சூழல் மாசு அதிகரித்திருப்பதன் காரணமாக அதன் தாக்கத்திலிருந்தும், இன்னும் நம்மைவிட்டு விலகாத கோவிட் தொற்றிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள இனிமேல் சாதாரண மாஸ்க் உதவாது…. என் 95 மாஸ்க்தான் பாதுகாப்பானது என்று ஒரு செய்தியில் படித்தேன். அது உண்மையா? அந்த மாஸ்க் டெங்குவிலிருந்தும் காக்குமா?

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

“சுழல் மாசைப் பொறுத்தவரை டெல்லி அளவுக்கு தமிழகத்தில் பெரிய பாதிப்பில்லை. எனவே என் 95 மாஸ்க் தேவையில்லை. மாசிலிருந்தும், கோவிட் உள்ளிட்ட தொற்றுகளிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ள சாதாரண துணி மாஸ்க்கே போதுமானது. என் 95 மாஸ்க்கை நாள் முழுவதும் அணிந்திருப்பது சிரமமாகவும் இருக்கும்.

டெங்கு பாதிப்பிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ள முதலில் கொசுக்களிடமிருந்து விலகி, சுகாதாரமான சூழலில் வாழ்வதை உறுதிசெய்யுங்கள். மழைக்காலம் என்றாலும் வீட்டைச் சுற்றி எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *