Share on Social Media


வைகோ,திருமாவளவன் உள்ளிட்டோர் தூபம் போட்டாலும் மத்திய அரசுடனான சண்டைப்போக்கை கைவிட்டு திமுக அரசு செயல்பட வேண்டும் என எச். ராஜா தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பண்டிட் தீனதயாள் உபாத்யா பயிற்சி முகாமில் பங்கேற்ற எச்.ராஜா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில்:
தமிழகம் (Tamil Nadu) முழுவதும் மீண்டும் வெள்ளம் என்று சொன்னால் அது புதிய விஷயம் அல்ல. 2011-க்கு முன்னாலும் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருக்கும் பொழுது  சென்னையில  வடிகால் பணிகளுக்காக பெர்மனன்ட் இன்ஸ்பெக்டருக்கு 633 கோடி ரூபாய் ஒதுக்கினார். ஆனால் அதற்கு நான்காண்டுகள் பிறகு 2015-லும் பெரிய அளவில் வெள்ளம் வந்தது.

இப்போது அதற்குப் பிறகும் அதிமுக அரசிலும் பல பணிகள் செய்யப்பட்ட பிறகும் வெள்ளம்  வந்திருக்கிறது. நான் ஏழாம் தேதி சென்னையில் இருந்தேன். விடிகாலையில் ஒரு மணி நேரம் பெய்த மழையால்  மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து வடபழனி வீட்டிற்கு செல்வதற்கே ஒரு மணி நேரம் ஆயிற்று. சிறிய கார்கள் செல்ல முடியாமல் நின்று போயின. 

நான் இரண்டு நாட்களுக்கு முன்னர் பெங்களூருக்கு சென்றிருந்தேன். அங்கு மழை பெய்தாலும், அரை மணி நேரத்துக்குள் மழை பெய்த சுவடே இல்லை. 

சென்னையில இருக்கின்ற ஏரிகளை எல்லாம் வீடுகள் ஆக்கி விட்டனர். அதுவும், திராவிடக் கட்சிகள் (Dravidian Parties) ஆட்சிக்கு வந்ததிலிருந்து தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஒழுக்கம் வேண்டாம், பொது வாழ்க்கைக்கும் ஒழுக்கம் வேண்டாம் என்று  தமிழ் மக்கள் மனதில் ஒரு கருத்து வந்து விட்டது. ஏரிகள் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கல்வி நிலையங்களாக மாறியிருக்கின்றன. 

ALSO READ:மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை வேண்டும் – சீமான்

வள்ளுவர் கோட்டம் இருக்கிறது ஏரியில். தமிழ்நாட்டில இந்த ஆறு மாதத்தில் குறைந்தது வடிகால் சிஸ்டத்தை சரி செய்திருக்கலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதம் தான் ஆகிறது என்று கூறுகிறீர்கள். ஆனால், ஆட்சிக்கு, 65-லேயே வந்துவிட்டீர்கள். இடையில் மாறி மாறி ஆட்சி மாறிக்கொண்டு இருக்கிறது.

நீட்தேர்வு (NEET Exam) குறித்து அரசியல் பிதற்றல்களை மீறி பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இனி நீட் தேர்வு குறித்து அரசியல் செய்ய வேண்டாம்.

தமிழகத்தில் 3 வேலைகள் மட்டுமே சரியாக செய்யப்படுகிறது. மத்திய அரசின் உதவியால் தடுப்பூசி செலுத்தும் பணி, ரேசன் கடையில் 5கிலோ அரிசி,1கிலோ பருப்பு மற்றும் 10வது முறையாக வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படுவதை தவிர வேறு எதுவும் சரியாக நடக்கவில்லை. 

தமிழக கோவில்களில் உள்ள தங்க நகைகளை எடுக்க கையில் சாக்குபையுடன் கோவில் கோவிலாக சென்ற ஸ்டாலின், சேகர்பாபுவின் செயலை நீதிமன்றம் தடுத்துள்ளது.

திமுக ஆட்சியில் பொய், போலி, பிரிவினைவாதம் மட்டுமே உள்ளதென்பதால் மத்திய அரசு உடனான சண்டைப்போக்கை கைவிட்டு சண்டைக்காரர்களான வைகோ ,திருமாவளவன் உள்ளிட்டோர் தூபம் போட்டாலும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ALSO READ:திருவள்ளூர் மழைநீரில் மூழ்கியிருக்கும் வகுப்பறைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *