Share on Social Media


துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் முதல் நெஞ்சம் மறப்பதில்லை, என்.ஜி.கே வரை இசையில் அசாத்தியமான மாயாஜாலங்களை நிகழ்த்திய செல்வராகவன்யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைகிறது.

8-வது முறையாக இணையும் இந்த கூட்டணியின் மற்றொரு சிறப்பு, இதில் நாயகனாக நடிப்பது தனுஷ். இந்த தகவலை செல்வராகவன் அறிவிக்க, யுவன் அதனை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனுஷ் எனும் அற்புதமான நடிப்பு கலைஞரை வளர்த்தெடுத்ததில் செல்வராகவன், வெற்றிமாறனுக்கு எந்த அளவிற்கு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் பங்கிருக்கிறது என சொல்லலாம்.

2020ம் ஆண்டின் டாப் 5 இயக்குநர்கள்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என தனுஷ் நடித்த ஆரம்பகால படங்களுக்கு பெரும் பலமாக இருந்தது யுவன் இசை தான். அதிலும் செல்வராகவன் படங்களில் மட்டும், யுவன் இசையில் இனம் புரியாத அற்புதங்கள் நிகழ்வதை உணர முடியும்.

தனுஷ் இல்லாமல் செல்வா இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி’ இதற்கு சிறந்த உதாரணமாகும். துரதிஷ்டவசமாக யுவன் இல்லாமல் சில படங்களை செல்வராகவன் இயக்கியிருக்கிறார். அவற்றிலும் இசை சரியாகவே கையாளப்பட்டிருந்தாலும், யுவன் இல்லாத உறுத்தல் ரசிகர்களுக்கு எழுவதை தவிர்க்க முடியாது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு காதுகளுக்கு இன்பமயமான இந்த செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. தனுஷ் நடிக்கும் புதிய படத்தில், அதுவும் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சேர்ந்துவிட்டார் என்பது சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. கூடுதல் தகவலாக வீ கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு இதனை தயாரிக்கிறார். விரைவில் அடுத்ததடுத்த அறிவிப்புகள் வெளியாகலாமென தெரிகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *