Share on Social Media


ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படமான ‘மாறன்‘ படத்தில் நடித்து வந்தார் தனுஷ். இதனை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் ‘மாறன்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கிய வரும் இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவில் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய தனுஷ், மீண்டும் ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்து நிலையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. இந்தப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ், அனிருத் கூட்டணி இந்த படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுய இன்ப வீடியோவை அனுப்பிய இளைஞர்: பிரபல நடிகையின் அதிரடி நடவடிக்கை!
இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாறன்’ படம் குறித்து ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதுவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ‘மாறன்’ படத்தின் பின்னணி இசையமைக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் அதிரடி ஆக்ஷன் படத்திற்கான பின்னணி இசையை எதிர்பார்க்கலாம் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மாறன்’ படத்தில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்கிற நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அண்ணாத்தே’யில் சிவா சொல்லி அடித்துள்ளார் ; படம் மிகப்பெரிய வெற்றி – ரஜினிகாந்த் புகழாரம்!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *