Share on Social Media


இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் திரைப்படம் மூலமாக இணைகின்றனர். புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நானே வருவேன் திரைப்படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ் கர்ணன் திரைப்படத்தின் வேலைகள் முடிந்தவுடன் அமெரிக்கா கிளம்பினார். தற்போது அமெரிக்காவில் தி கிரே மேன் ஹாலிவுட் படப்பிடிப்பின் ஷுட்டிங்கில் இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகின. இதனால் தனுஷ், செல்வராகவன் இருவரும் இணையும் திரைப்படத்தின் ஷுட்டிங் எப்போது துவங்கும் என்ற குழப்பத்தில் இருந்தனர் ரசிகர்கள்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான இந்த செய்தியை கண்டு மகிழ்ச்சியில் இருக்கின்றனர் தனுஷ் ரசிகர்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இந்த படத்தில் இணைவதால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்ட்ரியாவிற்கு தேசிய விருது கன்பார்ம்: இயக்குனர் மிஷ்கின் உறுதி!
தனுஷ் நாடு திரும்பியவுடன் கார்த்திக் நரேன் இயக்கும் D43 திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது போக ராம்குமார் இயக்கும் படம், மாரி செல்வராஜ் இயக்கும் படம் என அடுத்ததடுத்து அவரது லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன.

அண்மையில் ஓடிடி வெளியீடாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்தன. இதனால் சோகத்தில் இருந்த தனுஷ் ரசிகர்களுக்கு, நானே வருவேன் திரைப்படத்தின் அப்டேட் உற்சாகத்தை கொடுத்துள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *