Share on Social Media


கார்த்திக் சுப்புராஜ் , தனுஷ் கூட்டணியில் .உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஓடிடி வெளியீடாக நெட்பிளிக்ஸில் வெளியானது. வெகு நாட்களாக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் சஷிகாந்த்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை , ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கொரனோ ஊரடங்கு காரணமாக படம் வெளியாகாமல் இருந்த இந்த திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஓடிடியில் வெளியானது.

தனுஷின் கர்ணன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர், மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த திரைபடத்திற்கு பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களே வந்துள்ளன. தனுஷின் நடிப்புக்குப் பாராட்டுகள் கிடைத்திருந்தாலும், திரைக்கதை கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இது தவிர சமூக வலைதளங்களில் பலரும் படத்தில் இருக்கும் லாஜிக் மிஸ்டேக்குகளை புட்டுபுட்டு வைத்து வருகின்றனர்.

பிறந்தநாள் வாழ்த்துக் கூற ஆர்வமாய் காத்திருந்த ரசிகர்கள்: ஏமாற்றிய நடிகர் விஜய்!
படத்துக்கு வந்திருக்கும் எதிர்மறை விமர்சனங்களுக்கு இதுவரை தனுஷ் ரசிகர்கள் மட்டுமே பதிலளித்து வருகின்றனர். படத்துக்கு வந்த நெகடிவ் கமெண்ட்களுக்கு படக்குழுவினர் எவரும் இதுவரை வாய் திறக்காத நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து டிவிட்டியுள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு,’வெற்றி பெறுவது மட்டும் வெற்றியல்ல, தோல்வி முகம் மட்டும் தோல்வியல்ல, தொடர்ந்து உங்கள் பாதையில் சென்றுகொண்டே இருங்கள்’ என்று கேப்சன் கொடுத்துள்ளார். ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கு வந்திருக்கும் எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே சஷிகாந்த் இந்த பதிவை பகிர்ந்துள்ளதாக தனுஷ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *