Share on Social Media


அமெரிக்காவில் தொற்று நோய் பரவலை காரணமாக  வழங்கப்பட்ட நிவாரண திட்டங்களின் காலம் முடிவடையும் நேரத்தில் புதிய தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிவாரண திட்டத்தின் கீழ் வேலை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உதவிதொகை, வாடகை செலுத்தாதவர்களை வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான தடை உட்பட பல நடவடிக்கைகள் அடங்கும்.

இப்போது வியாபாரத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினாலும், வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்குவதால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் உதவிதொகைகாக விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் கணிசமாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை 4,19,000 என்ற அளவை எட்டியது. இந்த எண்ணிக்கை நாட்டின் தொழிலாளர் துறை முன்பு மதிப்பிட்டதை விட மிக அதிகம். 

ALSO READ | இறந்த பின் ஐஸ்பெட்டியில் நெடு நேரம் வைக்கப்பட்டவர் ‘குறட்டை’ விட்ட திகில் சம்பவம்

 

இதற்கிடையில், அதிபர் ஜோ பிடன் (Joe Biden) மீதான மதிப்பு குறைந்து வருவதாக கருத்து கணிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. பதவி ஏற்ற போது அவரை புகழ்ந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, தற்போது அதன் அளவு 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. அவர் வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க போதுமான கவனம் செலுத்தவில்லை என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பொருளாதார ஆலோசகராக இருந்த பொருளாதார நிபுணர் ஜேசன் ஃபர்மன், இது குறித்து கூறுகையில், கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் பரவலால் எழும் நிலைமையை பிடன் நிர்வாகம் கண்காணித்து வருவதாக தெரிவித்தார். அதனால் தான்  அனைத்து அமெரிக்கர்களும் விரைவில் தடுப்பூசி போடுமாறு அதிபர் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றார்.

கடந்த வாரம், வைரஸ் பரவிய செய்தி காரணமாக அமெரிக்க பங்குச் சந்தை பெரிதும் சரிந்தது.இது தொடர்பாக உரையாற்றிய ஜோ பைடன், ‘குறிப்பாக டெல்டா மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு, எச்சரிக்கை நடவடிக்கையை முழுமையாக பின்பற்ற வேண்டும். இந்த தொற்று மிகவும் ஆபத்தானது. குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்காவில் புதிய தொற்று  பாதிப்புகள் மிகவும் அதிகரித்துள்ளது. இந்த முறை தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இளம் குழந்தைகள் என்றார்.

அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் பொருளாதார வல்லுனரான கிளாடியா சைஹ்ம் கூறியதாவது – ‘மக்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், அவர்கள் பள்ளிக்குச் செல்வதையோ அல்லது வேலைக்கு செல்வதையோ  நிறுத்தினால், பொருளாதாரத்தில் பெரும் சிக்கல் ஏற்படும்’ என்றார். 

ALSO READ | NASA – SpaceX ஒப்பந்தம்: செவ்வாய்க்கு பிறகு வியாழன் கிரகத்தை குறி வைக்கும் நாசா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *