Share on Social Media


குடி, குடியைக் கெடுக்கும் என்று சொல்வார்கள். அதை நிரூபிக்கிறது வேலூர் அருகே நடந்துள்ள இந்த கொடூரக் கொலை. ஏற்கனவே நடந்த கொலைக்கு பழி வாங்க, இளைஞரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த பிறகு, சடலத்தை, கழிவு நீர் கால்வாய் ஓரம் புதைத்துவிட்டனர். இந்த கொலையை செய்த 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வேலூர் அடுத்த பெருமுகை மேலாண்டை தெருவை சேர்ந்த மறைந்த் சுந்தர்ராஜன்  -பேபி தம்பதியினரின் மகன் பாலமுருகன் (20). மெக்கானிக்காக வேலை  செய்து வரும் பாலமுருகன், கடந்த மாதம் 27-ம் தேதி வேலைக்கு போனவர் வீடு திரும்பவில்லை.
மகனைக் காணவில்லை என தாய் பேபி, சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

தாயின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சத்துவாச்சாரி காவல் துறையினர் பாலமுருகனை தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு தோட்டப்பாளையத்தில் சுகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாலமுருகனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

READ ALSO | உணவில் விஷம் வைத்த மனைவி, தப்பிப்பிழைத்த கணவன்

சுகுமாரின் கொலைக்கு பழி வாங்கவே பாலமுருகனை அழைத்து வந்து மது ஊற்றிக் கொடுத்திருக்கிறார்கள். வேலூர் கிரீன் சர்க்கில் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய் ஓரம் அமர்ந்து மது குடித்துவிட்டு, பின்னர் பாலமுருகனை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். பாலமுருகன் இறந்ததை உறுதி செய்துக் கொண்ட பிறகு, அருகில் இருந்த வீட்டில் இருந்த கடப்பாரை, மண்வெட்டியை எடுத்து வந்து புதார்களுக்கு மத்தியில் குழி தோண்டி புதைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த கரியன்(எ) ஜெகதீஷன் (19), மதிவாணன்(18) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பாலமுருகன் புதைக்கப்பட்டதாக சொன்ன இடத்தை அடையாளம் காட்ட அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள், அடையாளம் காட்டிய இடத்தில், ஏ.எஸ்.பி ஆல்பட் ஜான், வட்டாட்சியர் செந்தில் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், காணாமல் போன வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேரிடமும் காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கு பழிவாங்க இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

READ ALSO | சுடுகாட்டை சூதாட்டக் களமாக மாறிய நபர்கள் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *