Share on Social Media


திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி பொன்னேரி புரத்தைச் சேர்ந்தவர் குழந்தை (எ) நொண்டி குழந்தை இவரது மகன் பெலிக்ஸ்ஜான்சன் (28) என்பவர் இன்று மாலை ஆட்டோவில் மாவடிகுளம் அருகே சென்ற பொழுது மர்ம நபர்கள் வழிமறித்து சராமரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பெலிக்ஸ் ஜான்சன் முகம் சிதைந்து போனதோடு கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திலேயே பெலிக்ஸ் ஜான்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் பெலிக்ஸ் ஜான்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ | கெமிக்கல் நிறுவனத்தில் குளோரின் வாயு கசிவு – ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி 

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் நடத்திய விசாரனையில், கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பொன்மலை பட்டி கடைவீதியில் சின்ராசு என்பவரை வெட்டி கொலை சொந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி அலெக்ஸின் தம்பி தான் இந்த பெலிக்ஸ் ஜான்சன் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் சின்ராசு கொலை செய்யப்பட்டபோது அவரது நண்பர்கள் ‘விரைவில்’ என்று போஸ்டர் அடித்து இருந்தனர். இது சம்பந்தமாக பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து சில பேரை கைது செய்தனர். அதனால் இந்தக் கொலை பழிக்குப் பழி நடந்திருக்குமோ என்ற கோணத்தில் திருவெறும்பூர் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் திருச்சி எஸ்.பி சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு விசாரணை செய்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதே போல் இன்று மதியம் ஆலத்தூர் அருகே தனியார் பைனான்ஸ் ஊழியரை மிளகாய் பொடி தூவி வாலிபர்கள் வெட்ட முயற்சி செய்த அந்தப் பகுதியிலேயே மாலையில் கொலை நடந்திருப்பது திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *