இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது, “கோவிட்-19 வைரஸ் தொற்று மிகக் கொடுமையானது. இந்த வைரஸ் தொற்றுக்கள் மயோகார்டிடிஸ் போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தடுப்பூசியால் எங்காவது சிலருக்கு ஏற்படும் பக்க விளைவுகளைக் கண்டு பயந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது தவறு. தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது வைரஸ் தொற்று பாதிப்பை விட பாதுகாப்பானது என்று கூறுவது தவறு” என்று தெரிவித்திருக்கிறது.
diet tips: 48 வயதிலும் இளமையா, ஃபிட்டாக இருக்கும் ஜான் ஆபிரகாம்… அவரோட டயட் இதுமட்டும் தானாம்…
நியூசிலாந்தில் தடுப்பூசியின் பக்க விளைவுகளால் மயோகார்டிடிஸ் ஏற்பட்டு இறந்தவர்களில் இவர் இரண்டாவது நபர். இதற்குமுன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு பெண்மணி இதேபோல் தடுப்பூசியின் பக்க விளைவால் ஏற்பட்ட மயோகார்டிடிஸால் இறந்திருக்கிறார்.
அதேபோல நியூசிலாந்தில் மேலும் இரண்டு பேர் மயோகார்டிடிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுவனுக்கு 3 வயது. மற்றொருவர் 60 வயதுடையவர். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மயோகார்டிடிஸ் பிரச்சினைக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று ஆய்வின் முடிவில் தெரிய வந்தது.
முறையற்ற தூக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன… அதனை சரி செய்வது எப்படி?
ஃபைசரின் கோவிட்-19 தடுப்பூசியால் பயனடைந்தவர்கள் தான் அதிகம். மிக வெகு சிலருக்கே பக்க விளைவுகள் உண்டாகின்றன என்றும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தடுப்பூசியைத் தொடர்ந்து வரும் மயோகார்டிடிஸ் மற்றும் பெரிகார்டிடிஸ் நோயாளிகள் ஏற்கனவே வேறு ஏதாவது ஆரோக்கியப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தடுப்பூசி மிகக் குறைந்த பாதிப்புகளையும் அதிக அளவில் நன்மைகளையுமே செய்கிறது என்று உலக சுகாதார நிறுவனமும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.