Share on Social Media

கோவிட் தடுப்பூசி (கோவாக்சின்) முதல் தவணை போட்டுக்கொண்டேன். இரண்டாவது தவணை போட்டுக்கொள்ள வேண்டிய இடைவெளியில் அதைப் போடவில்லை. இப்போது எங்கு சென்றாலும் தடுப்பூசி ஸ்டாக் இல்லை என்கிறார்கள். இரண்டாம் தவணைக்கான காலக்கெடு தாண்டிவிட்டது. இந்நிலையில் நான் தடுப்பூசி கிடைக்கும்போது இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாமா அல்லது மீண்டும் முதல் டோஸிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமா?

– சுப்பிரமணி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருணாசலம்

மருத்துவர் அருணாசலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

“எல்லாத் தடுப்பூசிகளிலுமே முதல் டோஸ் போட்டுக்கொண்டு, அடுத்த டோஸ் போடுவதில் தாமதம் ஏற்படுவதை `லெஃப்ட் ஓவர்’ அல்லது `மிஸ்டு வாக்சின்’ என்று சொல்வோம். மீண்டும் எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது போட்டுக்கொள்வதுதான் நல்லது. அதற்காக முதல் டோஸிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பது எல்லாத் தடுப்பூசிகளுக்கும் பொருந்தாது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *